வீட்டுக்கடன்: இன்று நாம் மாதம் ரூ.25000 சம்பளம் பெறுபவர்கள் (Home Loan on Rs 25000 Monthly Salary) வீட்டுக் கடனை எப்படி பெறுவது? மற்றும் அதற்கான கணக்கீடு குறித்து பார்க்கப் போகிறோம்.
Home Loan Interest Rates of Various Banks: இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கவுள்ளது. இந்த தருணத்தில் பல வங்கிகள் மற்றும் வீட்டுவசதி நிதி நிறுவனங்களிடையே மலிவான வட்டி விகிதங்களில் வீட்டு கடன்களை வழங்க ஒரு பெரிய போட்டி உள்ளது. இந்த போட்டியால் வாடிக்கையாளர்ளுக்கு நன்மையே கிடைக்கிறது.
அரசுக்குச் சொந்தமான பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) அதன் பண்டிகை கால சலுகையின் ஒரு பகுதியாக தங்க நகைகள் மற்றும் சவரன் தங்கப் பத்திரங்களுக்கான கடன்களுக்கான வட்டி விகிதத்தை 145 அடிப்படை புள்ளிகள், அதாவது 1.45 சதவிகிதம் குறைத்துள்ளது.
'கனவு இல்லம்' என்ற உங்கள் ஆசையை நிறைவேற்ற ஒரு நல்ல வாய்ப்பு. தற்போது, வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் மிகக் குறைவாக உள்ளன. தனியார் மற்றும் அரசு துறை வங்கிகள் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை கடுமையாக குறைத்துள்ளன. தற்போது, புதிய வீட்டுக் கடனுக்கு 6.50 சதவீதமும், வீட்டுக் கடனை வேறு வங்கியில் மாற்றும் போது ஆண்டுக்கு 6.45 சதவீதமும் விதிக்கப்படுகின்றன. வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் குறைவாக உள்ள 6 வங்கிகளில், நீங்கள் 20 வருடங்களுக்கு ரூ .30 லட்சம் வீட்டுக் கடன் வாங்கினால், ஒவ்வொரு மாதமும் நீங்கள் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம்.
பேங்க் ஆஃப் பரோடா வீட்டுக் கடன் மற்றும் வாகனக் கடனுக்கான விகிதங்களை குறைத்துள்ளது. வரவிருக்கும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, பேங்க் ஆஃப் பரோடா வட்டி விகிதங்களை குறைத்துள்ளது.
முன்னதாக ஏப்ரல் மாதத்தில், எஸ்பிஐ வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை 6.70 சதவீதமாக குறைத்தது. இதனுடன், பெண் வாடிக்கையாளர்களுக்கு , அதில் மேலும் 0.05 சதவீதம் குறைக்கப்பட்டது.
Home loan balance transfer: இன்றைய காலகட்டத்தில் வங்கிகள் மற்றும் NBFC களின் வீட்டுக் கடன் திட்டங்கள் லட்சக்கணக்கான வீடு வாங்குபவர்களின் 'கனவு இல்லத்தை' நனவாக்குகின்றன. வீட்டுக் கடன் என்பது ஒரு நீண்ட கால கடன் ஆகும், இதில் வாடிக்கையாளர் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான EMI ஆக திருப்பிச் செலுத்த வேண்டும். இப்போது இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்கள் வங்கி, வீட்டுக் கடனுக்கு அதிக வட்டி வசூலித்தால் அல்லது பல்வேறு வகையான கூடுதல் கட்டணங்களை வசூலித்தால், உங்கள் வீட்டுக் கடன் நிலுவைத் தொகையை வேறு வங்கிக்கு மாற்றலாம். எனினும், வீட்டுக் கடனை எவ்வாறு எப்போது மாற்றினால் வாடிக்கையாளருக்கு அதிகம்
எஸ்பிஐ அதன் வரையறுக்கப்பட்ட கால அளவிற்கான 'Monsoon Dhamaka Offer'-ன் கீழ், வீட்டுக் கடன் செயலாக்கக் கட்டணத்தை தள்ளுபடி செய்தது. எஸ்பிஐ வீட்டுக்கடன் வட்டி விகிதம் 6.70% இல் தொடங்குகிறது.
SBI Home Loan Offer News: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான இந்திய ஸ்டேட் வங்கி (SBI) வீட்டுக் கடன் தொடர்பான பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. SBI தனது வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடனில் எஸ்பிஐ பருவமழைகால அதிரடி சலுகையை (SBI Monsoon Dhamaka Offer) அறிமுகம் செய்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.