அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிடிஷா பெஸ்பரூபா (30) பல டிவி நிகழ்ச்சிகளிலும், ஜக்கா ஜசோஸ் என்ற ஹிந்தி படத்திலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் மும்பையிலிருந்து டெல்லியின் குர்கான் பகுதியில் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று அவரது தந்தை அவருக்கு பல முறை போன் செய்தும் அவர் எடுக்கவில்லை இதன் காரணமாக அச்சம் அடைத்த அவர் தந்தை காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு இது தொடர்பாக கூறியுள்ளார்.
உழவர்கள் தற்கொலைக்கு தீர்வு காண மத்திய, மாநில அமைச்சர்கள் அடங்கிய கூட்டு குழுவை அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதைக்குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை கூறியதாவது:-
இந்தியா முழுவதும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான திட்டங்களை அடுத்த ஓராண்டில் செயல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு ஆணையிட்டிருக்கிறது. உழவர் நலனை பாதுகாக்கும் நோக்கம் கொண்ட உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டியதாகும்.
சென்னை தாம்பரத்தில் விமான படையில் பணியாற்றி வந்த சபீர் சிங் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். சபீர் சிங் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை தளத்தில் ஏர்மேனாக சபீர் சிங் பணியாற்றி வந்தார். சபீர் சிங் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். வழக்கம்போல நேற்றிரவு சபீர்சிங் பணிக்குச் சென்றுள்ளார். ரோந்துப்பணியின்போது, தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் 19-வது மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்துள்ளான். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜுன் பர்தவாஜ். மும்பையில் இருக்கும் தாஜ் லேண்ட்ஸ் எண்டு ஓட்டலில் தங்கி வந்துள்ளார். சில காலமாகவே போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்த பரத்வாஜ், கடும் மனச் சோர்வுக்கு ஆட்பட்டு இருந்துள்ளார். இதனால், நேற்று மாலை 6.30 மணி அளவில், ஃபேஸ்புக் லைவின் மூலம் பேசிவிட்டு, ஓட்டலின் 19-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சேலத்தில் மத்திய அமைச்சர் பொன்னார் மீது காலணி வீசியதால் பரபரபப்பு ஏற்பட்டது.
டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறையில் பிஎச்டி படித்து வந்த ஜே.என்.யூ. மாணவர் முத்துக்கிருஷ்ணன் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
அவரது உடல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு, பிறகு ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் அரிசிபாளையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் அவரது உடலுக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சிரியாவில் நீதிமன்ற வளாகத்தில் ற்கொலை படை தாக்குதலில் 25 பேர் பலி.
சிரியாவில் ஹமிடியே மாவட்டத்தில் உள்ள டமாஸ்கஸ் நீதிமன்ற வளாகத்தில் அத்துமீறி நுழைய முயன்ற தற்கொலை படை பயங்கரவாதியை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்திய போது தான் வைத்து இருந்த குண்டை பயங்கரவாதி வெடிக்க செய்துள்ளார். இந்த தாக்குதலில் 25 பேர் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவித பயங்கரவாதமும் பொறுப்பேற்கவில்லை.
சிரியாவில் கடந்த 5 நாட்களில் நடந்த 2 வது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த தமிழக மாணவர் முத்துகிருஷ்ணன் அவரது நண்பர்கள் அறையில் தற்கொலை செய்து கொண்டதாக 13-ம் தேதி தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் முத்துக்கிருஷ்ணனின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் தற்கொலைதான் செய்து கொண்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேத பரிசோதனை அறிக்கை முத்துக்கிருஷ்ணனின் பெற்றோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
நொய்டா: தெலுங்கானாவை சேர்த்த 21 வயது மாணவன் நொய்டா அமிட்டி பல்கலை விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். சாய் கிருஷ்ணா நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைகழத்தில் முதுநிலை டிப்ளமோ படித்து வந்தார். நொய்டா அமிடி விடுதி அறையில் சாய் கிருஷ்ணா தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில் சில நாட்கள்ளுக்கு முன் சாய் கிருஷ்ணாவிடம் தொலைபேசியில் பேசிய அவரது தந்தை, படிப்பில் கவனம் செலுத்துமாறு திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் படிப்பு செலவுக்காக வாங்கிய கடனை அவர்தான் அடைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஒரே பதவி - ஒரே ஓய்வூதியம் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ஓய்வுபெற்ற ராணுவத்தினர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் அரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரான ராம் கிஷன் கிரேவால் என்பவரும் பங்கேற்றிருந்தார். போராட்டத்தின் போது அவர் தனது குடும்பத்தாரை கைபேசி மூலம் தொடர்புகொண்டு ஒரே பதவி - ஒரே ஓய்வூதியம் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தற்கொலை செய்துகொள்ளப் போவதாக தனது மகனிடம் தெரிவித்துள்ளார்.
அருணாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் 47 வயதான கலிக்கோ புல் தற்கொலை செய்து கொண்டிருக்கக் கூடும் என முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அருணாச்சல் தலைநகர் இடாநகரில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
அருணாசலபிரதேசத்தில் நபம் துகி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக கட்சியின் 30 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தினர். அங்கு ஏற்பட்ட அரசியல் குழப்பத்தை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 26–ம் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் நேற்றிரவு 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களின் உடல்களைக் கைப்பற்றிய போலீஸார் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.