மராத்தா சமூகத்திற்கு 50 சதவீதத்திற்கும் மேலான இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று தெளிவுபடுத்திய உச்ச நீதிமன்றம், பொதுக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மராத்தா சமூகத்திற்கு இடஒதுக்கீடு அளிக்கும் செப்சி சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று நீதிமன்றம் கருதுகிறது. அதனால் மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு வழங்கிய மகாராஷ்டிரா அரசின் சட்டம் செல்லாது என அதிரடியாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை 3.92 லட்சம் பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனுடன் இந்தியாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.95 கோடிக்கு மேல் உள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்ஸிஜன் உற்பத்திக்காக திறப்பது குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும், இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தியும் பண்டாரம்பட்டி கிராம மக்கள் சார்பாக இன்று கருப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது.
மறைமுகமாக, குறுக்குவழியில், ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு, தமிழ்நாடு அரசு வழி செய்து விட்டது. இது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகும்: வைகோ அறிக்கை.
உச்சநீதிமன்ற வளாகத்தில், கொரோனா சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்ய தற்போது உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நீதிமன்ற வளாகத்திற்குள் படுக்கை வசதிகளை ஏற்படுத்திக்கொள்ளவும், RT-PCR போன்ற கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா அனுமதி அளித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள உற்பத்தி கூடத்தில் நாளொன்றுக்கு 500 டன் ஆக்ஸிஜன் (Oxygen) உற்பத்தி செய்ய முடியும் என்பதால், ஆக்சிஜன் தயாரிப்பதற்காக ஆலையை இயக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தது.
சட்டங்களை மீறும், தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் ஊக்குவித்ததாகவும் கூறப்படும் `புனித திருகுர்ஆனின்' (Holy Quran) 26 வசனங்களை அகற்றுவதற்கான வழிகாட்டுதலை நீதிமன்றம் வகுக்க வேண்டும் என்று உத்தரபிரதேச ஷியா வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவர் சையத் வாசிம் ரிஸ்வி மனுதாக்கல் செய்திருந்தார்.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தொடங்கி நாட்டில் தொடர்ந்து கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், உச்சநீதிமன்ற ஆன் மூலம் மூலம் வழக்கு விசாரணையை நடத்த முடிவு செய்துள்ளது.
போராட்டம் காரணமாக சாலைகள் மூடப்பட்டுள்ளதால், நாய்டா பகுதியில் இருந்து தில்லி செல்ல பொதுவாக 20 நிமிடங்களில் கடக்கப்படும் தூரத்தை கடந்து செல்ல 2 மணி நேரம் ஆகிறது.
இந்தியாவில் - குறிப்பாக ஜம்முவில் சட்டவிரோதமாக குடியேறியிருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களை காக்கும் நோக்கில் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் இந்த வழக்கை தொடர்ந்தார்.
ஆரக்கிள் உடனான நீண்டகால பதிப்புரிமைப் போரில் கூகுள் திங்களன்று ஒரு பெரிய வெற்றியைப் பெற்றது. ஆண்ட்ராய்ட் இயக்க முறைமையை உருவாக்க ஆரக்கிளின் மென்பொருள் குறியீட்டைப் பயன்படுத்துவது கூட்டாட்சி பதிப்புரிமைச் சட்டத்தை மீறவில்லை என்று கூறி அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சட்டவிரோத குடியேறிகளின் தலைநகரமாக இந்தியா மாறக் கூடாது. ரோஹிங்கியா முஸ்லிகள் நம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளவர்கள் என மத்திய அரசு வாதிட்டது
ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் 1957 ஆம் ஆண்டில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த நீதிபதி ரமணா 1983 ஆம் ஆண்டில் சட்டப்படிப்பைத் தொடங்கினார். ஆந்திராவின் உயர் நீதிமன்றம், மத்திய மற்றும் ஆந்திர மாநில நிர்வாக தீர்ப்பாயங்கள் மற்றும் சிவில், குற்றவியல், இந்திய உச்ச நீதிமன்ற செயல்முறைகள், அரசியலமைப்பு, தொழிலாளர், சேவை மற்றும் தேர்தல் விஷயங்கள் ஆகியவற்றில் அவர் பயிற்சி பெற்றவர்.
நோட்டாவுக்கு அதிக பட்சமான வாக்குகள் கிடைத்தால் தேர்தல் முடிவை ரத்து செய்ய வேண்டும் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
Reliance-Future Deal:முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ரிலையன்ஸ்-ப்யூச்சர் குழுமத்தின் ஒப்பந்தத்தை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.