கனடா சுவாமிநாராயண் கோயில்: கனடாவின் டொராண்டோவில் உள்ள சுவாமிநாராயண் கோயிலில் இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள் மற்றும் நாசவேலைகளுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கனடா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. அந்த ட்வீட்டில், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. சுவாமிநாராயண் கோவிலின் சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு விஷயங்கள் எழுதப்பட்டுள்ளன. இந்திய உயர் தூதரகத்தின் ட்வீட்டிற்கு முன்னதாகவே, பல கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இந்துக்கள் சுவாமிநாராயண் கோவிலில் இந்தியாவுக்கு எதிரான முழக்கங்களை கண்டித்துள்ளனர்.
இந்திய தூதரகம் தனது ட்வீட்டில், 'டொராண்டோவில் உள்ள BAPS சுவாமிநாராயண் மந்திரில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை நாங்கள் கண்டிக்கிறோம். கனடா நிர்வாகம் இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து கோவில்களுக்கு எதிரான வெறுப்பு குற்றங்கள் குறித்து கனடாவில் உள்ள இந்துக்கள் கவலையடைந்துள்ளதாக கனடா நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரா ஆர்யா தெரிவித்துள்ளார். அவர் தனது ட்வீட்டில், ‘டொராண்டோவில் உள்ள சுவாமிநாராயண் கோவிலில் காலிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய அத்துமீறலை அனைவரும் கண்டிக்க வேண்டும். இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை. கனடாவில் உள்ள இந்து கோவில்கள் கடந்த காலங்களில் வெறுப்பு தாக்குதலுக்கு பலியாகியுள்ளன. இதுபோன்ற சம்பவங்களால் இந்துக்கள் கவலையடைந்துள்ளனர்’ என குறிப்பிட்டுள்ளார்.
கோவிலின் சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்ட பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. கனடா எம்பி ரூபி சஹோடா கூறுகையில், ‘சுவாமிநாராயண் கோயிலில், வெறுப்பு கோஷம் எழுப்புவது இழிவானது மற்றும் அருவருப்பானது. கனடாவில் உள்ள அனைத்து மதத்தினருக்கும் அச்சமின்றி, தங்கள் தெய்வங்களை வணங்க உரிமை உண்டு. இந்த செயலுக்காக குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்’ என்றார்.
Unprovoked defacement of #HinduTemple in Canada. Can @PierrePoilievre assure his Conservatives wouldn’t indulge in identity-politics? Can his deputy @TimUppal condemn this act unequivocally & assure that he’d not overlook Khalistan extremism when in power?pic.twitter.com/g5lyOILl4Y
— Puneet Sahani (@puneet_sahani) September 14, 2022
மேலும் படிக்க | கனடா கல்லூரிகளில் சேர காத்திருக்கும் இந்திய மாணவர்களுக்கு நீடிக்கும் சிக்கல்!
பிராம்ப்டன் தெற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சோனியா சித்து தனது ட்விட்டர் பதிவில், "டொராண்டோவில் உள்ள சுவாமிநாராயண் கோவிலில் நடந்த நாசவேலையால் நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். நாங்கள் பன்முக கலாச்சார சூழலிலும், பல மத சமூகத்தில் வாழ்கிறோம், அங்கு அனைவரும் பாதுகாப்பாக உணர வேண்டும்" என்றார்.
மேலும் படிக்க | கனடா மாணவர் விசா குறித்து பலரும் அறிந்திராத ‘ஒரு’ தகவல்!
மேலும் படிக்க | இந்திய மாணவர்களுக்கு விரைவில் முன்னுரிமை விசா: இங்கிலாந்து தூதரகம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ