அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் (Joe Biden) பதவியேற்றார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஜோ பைடன் தனது குடும்ப பைபிள் சாட்சியாக பதவியேற்றார். இந்த பைபிள் 127 ஆண்டு பழையது என்பது குறிப்பிடத்தக்கது.
பதவியேற்பு நிகழ்ச்சி Capitol Hill கட்டடத்தில் நடைபெற்றது. 2009 மற்றும் 2013ஆம் ஆண்டுகளிலும் இதேபோன்றுதான் அவர் துணை அதிபராக பதவியேற்றார். செனட் சபை உறுப்பினராக பதவியேற்ற போதும், இதே பைபிள் சாட்சியாகவே அவர் பதவியேற்றார்.
இனி பணியாற்றுவதற்கான நேரம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டிவிட்டரில் செய்தி வெளியிட்ட பிறகு பணிகளை துவங்கிவிட்டார்.
There is no time to waste when it comes to tackling the crises we face. That's why today, I am heading to the Oval Office to get right to work delivering bold action and immediate relief for American families.
— President Biden (@POTUS) January 20, 2021
கமலா ஹாரிஸ் (Kamala Harris) அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்றார். அவருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சோனியா சோட்டோமேயர் (Justice Sonia Sotomayor) பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர், முதல் கறுப்பினப் பெண், முதல் தெற்காசியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
Also Read | அமெரிக்க துணை அதிபராகும் கமலா ஹாரிஸ் & Tamil Nadu பூர்வீக கிராமம்
கமலா ஹாரிஸ் இரண்டு பைபிள்கள் சாட்சியாக பதவியேற்றார். அதில் ஒன்று அவரது நெருங்கிய குடும்ப நண்பரான ரெஜினா ஷெல்டன் என்பவருக்கு சொந்தமானது. மற்றொன்று உச்ச நீதிமன்றத்தில் பொறுப்பு வகித்த முதல் ஆப்ரிக்க-அமெரிக்கரான துர்கூட் மார்ஷல் என்பவருடையது.
பதவியேற்ற பிறகு, மக்களுக்கு சேவை செய்யத் தயாராகிவிட்டதாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் டிவிட்டரில் செய்தி வெளியிட்டார்.
Ready to serve.
— Vice President Kamala Harris (@VP) January 20, 2021
அமெரிக்காவில் பல சோதனைகளை கடந்து மக்களாட்சி வென்றுள்ளது. நீண்ட தூரம் கடந்து வந்துள்ளோம். இன்னும் தூரம் செல்ல வேண்டும். இன்னும் நிறைய காயங்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது என்று அதிபராக பதவியேற்ற பிறகு அதிபர் ஜோ பைடன் (Joe Biden) தனது முதல் உரையில் குறிப்பிட்டார்.
இந்த பதவியேற்பு விழாவில் அதிக கூட்டம் இல்லை. கொரோனா அச்சுறுத்தலால் சமூக தொலைவு கடைபிடிக்க வேண்டும், ஒரே இடத்தில் பலர் ஒன்று சேர வேண்டாம் என்ற கட்டுப்பாடுகள் உலகம் முழுவதும் நிலவுகிறது. அது அமெரிக்க அதிபரின் பதவியேற்பு விழாவிலும் எதிரொலித்தது.
Also Read | Joe Biden பதவியேற்கும் நாளில் 4 விண்கற்கள் பூமியின் பாதையில் வருகிறதா?
தேசிய மாலில் 200,000 க்கும் மேற்பட்ட மாநில மற்றும் மாகாணக் கொடிகள் நிறுவப்பட்டிருந்தன. பெரும்பாலான நிகழ்ச்சிகள் மெய்நிகர் நிகழ்வுகளாக (virtual) நடைபெற்றன.
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாமல் ஃப்ளோரிடாவுக்கு சென்று விட்டார் பதவியில் இருந்து விலகிய டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump). அமெரிக்க வரலாற்றிலேயே பதவி விலகும் அதிபர் ஒருவர், புதிய அதிபரின் பதவியேற்பு விழாவில் கலந்துக் கொள்ளவில்லை என்பது முன்னெப்போதும் இல்லாத ஒன்று.
அமெரிக்க துணை அதிபர் பதவியில் இருந்து விலகிய மைக் ப(Mike Pence) பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் கலந்துக் கொண்டார்.
ALSO READ | மவுனம் கலைத்த மெலினியா டிரம்ப்... US Capitol வன்முறை குறித்து கூறியது என்ன..!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR