Kabul Airport Blast: காபூல் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல்; ISIS பொறுப்பேற்பு

டெல்லிகிராம் கணக்கில் காபூல் விமான நிலையத்தில் நடந்த இரட்டைத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 27, 2021, 06:42 AM IST
  • Abbey Gate அருகே தாக்குதல்
  • தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உட்பட 64 பேர் கொல்லப்பட்டனர்
  • தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்கா எச்சரித்தது
Kabul Airport Blast: காபூல் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல்; ISIS பொறுப்பேற்பு title=

Kabul Airport Blast: ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையம் அருகே வியாழக்கிழமை நடந்த இரண்டு தற்கொலை தாக்குதல்களில் குறைந்தது 72 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். அதே நேரத்தில், இப்போது காபூல் விமான நிலையத்தில் நடந்த இரட்டைத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ்-கே (ஐஎஸ்ஐஎஸ் காரோஷன்) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

காபூல் தாக்குதல் (Kabul Blast) குறித்து வெள்ளை மாளிகையில் இருந்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன் (Joe Biden) , 'தாக்குதல் நடத்தியவர்களை நாங்கள் மன்னிக்க மாட்டோம். நாங்கள் மறக்க மாட்டோம். நாங்கள் உங்களை வேட்டையாடுவோம். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க குடிமக்களை மீட்போம். அதே நேரத்தில், பயங்கரவாதக் குழு ISIS-K, காபூல் விமான நிலையத்தில் இரட்டைத் தாக்குதலுக்கு குழுவின் டெலிகிராம் கணக்கில் பொறுப்பேற்றுள்ளது.

ALSO READ | காபூல் விமான நிலையத்தில் ஒரு பாட்டில் தண்ணீர் ரூ. 3000, ஒரு தட்டு சோறு ரூ. 7500!!

அதே நேரத்தில், விமான நிலையத்தின் தாக்குதலில் குறைந்தது 60 ஆப்கானியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 143 பேர் காயமடைந்தனர் என்று ஆப்கானிஸ்தான் அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் இரண்டு அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, 11 அமெரிக்க கடற்படையினர் மற்றும் கடற்படை மருத்துவ பணியாளர்களும் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் மேலும் 12 பணியாளர்கள் காயமடைந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

இந்த தாக்குதலை முதலில் பென்டகன் அமைப்புதான் உறுதி செய்தது. இந்த தாக்குதல் சம்பவம் நடந்ததும் உடனடியாக அமெரிக்க அதிபர் பிடன் வெள்ளை மாளிகையில் இருக்கும் Situation Room எனப்படும் அவசர அறைக்கு சென்று அவசர மீட்டிங் நடத்தினார். 5,525 சதுர அடி கொண்ட மிகப்பெரிய இந்த அறையில் காபூலில் நடக்கும் விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இதில் லைவ் சாட்டிலைட் வீடியோ, டிரோன் வீடியோ மூலம் நிலைமையை கண்காணித்தார். அமெரிக்க வீரர்களின் நிலை குறித்தும் ஆலோசனை செய்தார்.

 

 

இதற்கிடையே, காபூல் விமான நிலைய வெடிகுண்டு தாக்குதலுக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், காபூல் விமான நிலைய குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் காரோஷன் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்புக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. எனவே இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

ALSO READ | ஒரு வாரத்தில் போகவில்லை என்றால் போரில் சந்திக்கலாம்: இங்கிலாந்தை எச்சரிக்கும் தாலிபான்​

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News