இந்தியாவிற்குள் போலி நாணயங்களை புகுத்தும் பாகிஸ்தான்..!

பாகிஸ்தான் தனது இராஜதந்திர பணிகளைப் பயன்படுத்தி போலி நாணயத்தை இந்தியாவுக்குள் செலுத்துவதாக தகவல்!!

Last Updated : Oct 9, 2019, 03:28 PM IST
இந்தியாவிற்குள் போலி நாணயங்களை புகுத்தும் பாகிஸ்தான்..! title=

பாகிஸ்தான் தனது இராஜதந்திர பணிகளைப் பயன்படுத்தி போலி நாணயத்தை இந்தியாவுக்குள் செலுத்துவதாக தகவல்!!

கறுப்புப் பணத்தைத் தடுப்பதற்காக உயர் பணமதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்களை 3 ஆண்டுகளுக்கு முன் இந்திய அரசு பணமதிப்பிழப்பு செய்து அதிரடி நடவடிக்கையை எடுத்தது. ஆனால், தற்போது லக்ஷர் இ தொய்பா, ஜெய்ஷி இ முகம்மது போன்ற பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி அளிப்பதற்காக கள்ள நோட்டுக்களை அச்சடித்து, இந்தியாவிற்கு கடத்தி, புழக்கத்தில் விடும் பணியை பாகிஸ்தான் துவக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவிற்கு கள்ளநோட்டுக்களை கொண்டு வருவதற்காக நேபாளம், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளின் தூதரக ரீதியிலான உறவை பாக்., தவறாக பயன்படுத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கள்ள நோட்டுக்களை எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மிக தத்ரூபமாக பாகிஸ்தானின் உளவு அமைப்பான ISI தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு மே மாதம், ரூ.76.7 மில்லியன் மதிப்புடைய இந்திய ரூபாய் நோட்டுக்களை கடத்தி வந்ததாக காத்மண்டு விமான நிலையத்தில் 3 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி அன்று ரூ.1 மில்லியன் இந்திய ரூபாய் நோட்டுக்களை கடத்தி வந்ததாக இந்தியாவின் பஞ்சாப் போலீசார் ஒருவரை கைது செய்தனர். இந்தியாவில் பணமதிப்பிழப்பு செய்யப்படுவதற்கு முன் இந்திய ரூபாய் நோட்டுக்களை போன்று கள்ளநோட்டுக்கள் அச்சடித்து தரும் முக்கிய இடமாக காத்மண்டு விளங்கியது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியாவிற்குள் மீண்டும் கள்ளநோட்டுக்கள் புழக்கத்தில் வருவதை தடுக்க எல்லையில் அனைத்து வகைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

 

Trending News