உலகம்: இந்தியாவில் வெள்ளிக்கிழமை இரவு வரை 13,835 கோவிட் -19 தொற்று பதிவாகியுள்ளது. அவற்றில் 11,616 பேர் செயலில் உள்ளனர்மற்றும் 1,766 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டதாகவும், நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 452 ஐ எட்டியுள்ளது எனசுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 2,231,438 ஐ எட்டியுள்ளது. உலகளாவிய கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 150,000 ஐ தாண்டிவிட்டதாக செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 35,000 ஐ தாண்டியுள்ளது. மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 700,000 ஐ நெருங்குகிறது என்று செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் விவசாயிகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 19 பில்லியன் டாலர் நிவாரணம் அறிவித்துள்ளார்.
உலகளாவிய தொற்றுநோயின் அசல் மையமான வுஹானில் மீண்டும் தொற்று நோய் பரவி இருப்பதை பார்த்தால், பெய்ஜிங் அளிக்கும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் சீனா தனது எண்ணிக்கையை மூடிமறைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டினார்.
வெள்ளியன்று, ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ், தொற்றுநோயின் காரணமாக தடுமாறி வரும் பொருளாதாரத்தை உயர்க்த்த "எதை செய்ய வேண்டுமோ அதைச் செய்வேன்" என்றார். ரிசர்வ் வங்கி ரெப்போ வீதத்தைக் குறைத்து. பல விதிமுறைகளை எளிதாக்கியது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட ஆப்பிரிக்காவுக்கு 44 பில்லியன் டாலர் தேவைப்படுகிறது என உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது.