இஸ்லாமாபாத்: இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் அரசாங்கம் தேசிய சட்டமன்றத்தில் வழங்கிய தகவல்களின்படி, பாகிஸ்தானின் பெரும்பாலான முக்கிய நகரங்களில் குடிமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில் பெரும் பிரச்சனை உள்ளது.
டான் பத்திரிக்கையின் கூற்றுப்படி, அவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஷிப்லி ஃபராஸ், இது குறித்த தரவுகளை வழங்கினார். பாகிஸ்தான் (Pakistan) ஆராய்ச்சி கவுன்சில் மூலம் 29 நகரங்களில் நிலத்தடி நீர் சோதிக்கப்பட்டது. இவற்றில் 20 நகரங்களில் பல்வெறு இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட நீர் மாதிரிகள் பாதுகாப்பற்றதாக இருந்ததாக அந்த தரவுகள் தெரிவிக்கின்றன.
சிந்த் பகுதியில் உள்ள மீர்பூர்காஸ் மற்றும் ஷஹீத் பெனசிராபாத் (நவாப்ஷாஹ்) மற்றும் கில்கிட் ஆகிய மூன்று நகரங்களில் உள்ள நிலத்தடி நீர் குடிப்பதற்கு 100 சதவிகிதம் பாதுகாப்பற்றதாக உள்ளது என்று PCRWR அறிவித்துள்ளது.
மேலும், சியால்கோட் மற்றும் குஜராத்திலிருந்து 9 இடங்களிலிருந்து பெறப்பட்ட நிலத்தடி நீர் (Water) மாதிரிகள் குடிப்பதற்கு 100 சதவிகிதம் பாதுகாப்பானதாக இருப்பதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ALSO READ: பாகிஸ்தானில் அடித்து நொறுக்கப்பட்ட விநாயகர் கோவில்; சீரமைப்பதாக இம்ரான் உறுதி
ஜூலை மாதம், நாடாளுமன்ற தேசிய சுகாதார சேவைகளின் செயலாளர் டாக்டர். நவுஷீன் ஹமீத், பாகிஸ்தானின் தனிநபர் நீர் இருப்பு 1947 ல் 5,600 கன மீட்டராக இருந்து என்றும், 2021 இல் அது சுமார் 1,038 கன மீட்டராக, அதாவது 400 சதவிகிதம் குறைந்துள்ளது என்றும் கூறினார்.
இது மிகவும் கவலைக்கிடமான விஷயமாகும் என நவுஷீன் தெரிவித்தார். உலகளவில் அதிக அளவு மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் ஐந்தவது இடத்தில் இருக்கும் பாகிஸ்தானில், தண்ணீர் பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்சனையாகும் என்றார் அவர்.
போதிய நீர் வழங்கல் இல்லாதது நாட்டில் உணவுப் பாதுகாப்பை மேலும் மோசமாக்கியது என்பதையும் அவர் எடுத்துரைத்தார். பிரச்சினையை சரியான நேரத்தில் தீர்க்காவிட்டால், நாடு முழுவதும் உள்ள தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பாகிஸ்தானில் பஞ்சம் போன்ற சூழ்நிலை ஏற்படலாம் என்று நிபுணர்கள் முன்னதாக எச்சரித்துள்ளதாக ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.
அறிக்கையின்படி, நாட்டில் குறைந்த மழையின் அளவு காரணமாக ஆறுகள் வறண்டன. இதனால் ஏற்பட்ட நீர் பற்றாக்குறை (Water Shortage) நாட்டில் எச்சரிக்கை மணிகளாக ஒலித்தன. புதிய நீர் தேக்கங்களை உருவாக்கி நீர் வீணாவதை தடுக்காவிட்டால், பாகிஸ்தான் பஞ்சம் போன்ற நிலையை எதிர்கொள்ளும் என்று நீர் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மார்ச் மாதத்தில், சர்வதேச நாணய நிதியம் (IMF) கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானை மூன்றாவது இடத்தில் வைத்தது.
ALSO READ: தாலிபான்களுக்கு பயங்கரவாதிகளை சப்ளை செய்கிறார் இம்ரான்கான்: ஆப்கான் அரசு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR