ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் சூப்பர் தயாரிப்பு! பிளாஸ்டிக்கிற்கு குட்பை!

நொய்டாவில் செயல்பட்டு வரும் ஸ்டார்ட் அப் நிறுவனம் , பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களுக்கு மாற்றாக காகிதத்தை கொண்டு பாட்டில்களை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 2, 2021, 02:40 PM IST
  • ஆறுகள், பெருங்கடல்கள் என அனைத்து பரப்புகளிலும் பிளாஸ்டிக்குளின் பாதிப்புகள் இல்லாத இடமே இல்லை என்ற அளவுக்கு உள்ளன.
  • ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கியெறியப்படும் ஷாம்பு, கண்டிஷ்னர், ஹேண்ட்வாஷ் பாட்டில்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவுகள், இதில் சரிபாதி இருப்பதாக ஐ.நா தெரிவிக்கிறது.
ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் சூப்பர் தயாரிப்பு! பிளாஸ்டிக்கிற்கு குட்பை!  title=

நொய்டா :  நொய்டாவில் செயல்பட்டு வரும் ஸ்டார்ட் அப் நிறுவனம் , பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களுக்கு மாற்றாக காகிதத்தை கொண்டு பாட்டில்களை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.

1907-ம் ஆண்டு அறிவியலாளர் லியோ பேக்லேண்ட், இயற்கை மூலக்கூறு இல்லாத பாலிமர் பேக்லைட்டை கண்டுபிடித்தபோது, இது உலகின் மாசுபாட்டிற்கு மிக முக்கிய காரணமாக இருக்கப்போகிறது என்பதை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.  அவரின் கற்பனை மற்றும் ஆய்வில் மூலம் உருவான முதல் முழு செயற்கை பிளாஸ்டிக்குகள், இன்று உலக சுகாதார மாசுபாட்டிற்கு அச்சுறுத்தக்கூடிய பெரிய ராட்சசனாக உருவெடுத்துள்ளன. ஆறுகள், பெருங்கடல்கள் என அனைத்து பரப்புகளிலும் பிளாஸ்டிக்குளின் பாதிப்புகள் இல்லாத இடமே இல்லை என்ற அளவுக்கு உள்ளன.

மனிதர்கள், விலங்குகள், பறவைகள் என ஒட்டுமொத்த உயிரியல் சமூகமும் பிளாஸ்டிக்கினால் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் இந்த சூழலில், நொய்டாவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று, கக்ஸி பாட்டில்கள் மற்றும் மக்கும் காகித கழிவுகளைக் கொண்டு பாட்டில்களை வடிவமைத்துள்ளனர்.  இரண்டரை வருட தீவிர ஆராய்ச்சிக்குப் பின்னர், காகிதத்தின் மீது ஒரு சவ்வு உருவாக்கி, ஹைட்ரோபோபிக்காக வடிவமைத்துள்ளது. இந்தப் பாட்டில்கள் எளிதில் மக்கும் தன்மையுடையதாகவும், கசிவுகள் ஏதும் இல்லாமலும் இருக்கும் என அந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் கூறியுள்ளது.

bottle

இந்த பாட்டில் வடிவமைப்பில் ஈடுபட்ட கமிஷிகா கணேரிவால் பேசும்போது, தாங்கள் தயாரித்துள்ள சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பாட்டில் 2022-ம் ஆண்டு முதல் விற்பனை சந்தைக்கு வரும் எனத் தெரிவித்துள்ளார்.  இந்த பாட்டில் இப்போது இருக்கும் சூழலில் 6 மாதங்கள் வரை பயன்படுத்த முடியும் எனக் கூறியுள்ள அவர், பிளாஸ்டிக்கால் உலகம் எதிர்கொண்டிருக்கும் காலநிலை மாற்ற அச்சுறுத்தலுக்கு இந்தக் கண்டுப்பிடிப்பு சிறதளவேனும் தீர்வாக அமையும் என கூறியுள்ளார்.  மேலுமா,ஐ.நா அமைப்பின் தகவல்படி, ஆண்டு ஒன்றுக்கு 300 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த பிளாஸ்டிக் கழிவுகளின் எடை, ஒட்டுமொத்த உலகத்தில் வசிக்கும் மக்களின் எடைக்கு நிகரானது.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கியெறியப்படும் ஷாம்பு, கண்டிஷ்னர், ஹேண்ட்வாஷ் பாட்டில்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவுகள், இதில் சரிபாதி இருப்பதாக ஐ.நா தெரிவிக்கிறது. ஆண்டு ஒன்றுக்கு 8 மில்லியன் பிளாஸ்டிக் கழிவுகள் பெருங்கடல்களில் குவிக்கப்படுகின்றன.  இதேநிலை நீடிக்குமேயானால் 2050-ம் ஆண்டுக்குள் கடல்களில் இருக்கும் மீன்களை விட பிளாஸ்டிக்குகளின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். நொய்டா ஸ்டார்ட் அப் நிறுவனம் தயாரித்துள்ள புதிய காகித பாட்டில்களுக்கு தேவையான மூலப்பொருட்களான காகித கழிவுகள் இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு, ஹைதராபாத்தில் உள்ள பெண் தொழில்முனைவோர் மையத்துடன் இணைந்து உருவாக்கப்படுகின்றன.

இது குறித்து சமிக்ஷா பேசும்போது, "அன்றாடம் உபயோகப்படுத்தும் சிகரெட் துண்டுகள் முதல் பாட்டில் மூடிகள் வரை ஏராளமானவை பிளாஸ்டிக் கழிவுகளே. அவை அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்துவதால், அது குறித்து அனைவரும் அக்கறை கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு மாற்றான பொருட்கள் கண்பிடித்து உபயோகப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

ALSO READ பிரமிடுகளை உருவாக்கியது யார்? அவற்றின் பின்னணி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News