அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அதிபர் ஒபாமா பேசினார். அப்போது, குடியரசு கட்சியைச் சேர்ந்த அனைவரும் அக்கட்சி சார்பில் அதிபர் தேர்தல் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பை நிராகரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் டிரம்ப் அதிபர் பதவிக்கு தகுதியற்றவர். அமெரிக்க அதிபராக யாரையும் ஆதரித்து இந்த கருத்தை நான் கூறவில்லை. டிரம்ப் எனது கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் நான் இதே கருத்தை தான் கூறி இருப்பேன். அதிபராக இருந்து சேவையாற்றுவதற்கு அவருக்கு எந்த தகுதியும் இல்லை என நான் கடந்த வாரம் கூறி இருந்தேன். அதை டிரம்ப் தொடர்ந்து நிரூபித்து வருகிறார்
நமது நாட்டிற்காக அவர் மிகப் பெரிய தியாகம் செய்து விட்டதை போல் பேசுகிறார். உண்மையில் எந்த தியாகத்தையும் அவர் செய்து விடவில்லை. ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆசிய நாடுகளின் பிரச்னைகள் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. அதனாலேயே அவர் அதிபராவதற்கு பொருத்தமற்றவர் என கூறினேன் என தெரிவித்துள்ளார்.