Budget 2024: 2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட் ஜூலை 23 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் (Finance Minister) நிர்மலா சீதாராமன் அவர்கள் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வார். மூன்றாவது முறையாக பாஜக தலைமையிலான என்டிஏ அரசாங்கம் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. இந்த ஆட்சிக் காலத்தின் முதல் பட்ஜெட் ஆகும் இது. ஆகையால் இது குறித்த எதிர்பார்ப்புகளும் மக்களிடையே அதிகமாக உள்ளன.
Union Budget 2024: பட்ஜெட்டுக்கான ஆயத்த பணிகள்
பட்ஜெட்டுக்கான ஆயத்த பணிகளை நிதி அமைச்சகம் செய்து வருகின்றது. பல தரப்பிலிருந்து பல வித கோரிக்கைகளும் நிதி அமைச்சகத்திற்கு அளிக்கப்பட்டுள்ளன. ஒருபுறம் நடுத்தர வர்க்க மக்களுக்கு மிகப்பெரிய அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மறுபுறம் ஆயுஷ்மான் பாரத், அடல் ஓய்வூதிய திட்டம் போன்ற அரசாங்க நலத்திட்டங்களும் மேம்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
அடல் ஓய்வூதியத் திட்டம்
இந்த முறை பட்ஜெட்டில், அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension Yojana) என்றழைக்கப்படும் அடல் ஓய்வூதிய திட்டம் மூலம் கிடைக்கும் தொகையை அரசாங்கம் அதிகரிக்க கூடும் என்று கூறப்படுகிறது. இது குறித்து அரசாங்கம் எந்தவித அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. எனினும் இதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக நிபுணர்கள் கருதுகிறார்கள். இது நடக்கிறதா இல்லையா என்பது பட்ஜெட்டுக்கு பின்னரே தெரியவரும். ஜூன் 20 ஆம் தேதி வரையிலான தரவுகளின் படி, அடல் ஓய்வூதிய திட்டத்தில் மொத்தம் 6.62 கோடி பேர் தங்கள் கணக்குகளை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் இந்த ஓய்வூதிய திட்டத்தின் ஓய்வூதிய அளவு அதிகரிக்கப்பட்டால் கோடிக்கணக்கான மக்களுக்கு அது நிவாரணமாக அமையும்.
APY: ஐந்தாயிரம் ரூபாய் ஓய்வூதியம்
அடல் ஓய்வூதியத் திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 1,000 ரூபா முதல் 5,000 ரூபாய் வரை ஓய்வூதியம் அளிக்கப்படுகின்றது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான PFRDA இந்த திட்டத்தை நிர்வகிக்கின்றது. கணக்குதாரர்களின் முதலீட்டுக்கு ஏற்றவாறு பலன் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெற முதலில் வங்கிகளில் அடல் பென்ஷன் யோஜனா கணக்கை தொடங்க வேண்டும். அந்த வங்கியில் கணக்குதாரரின் தொகை சேமிக்கப்பட்டு 60 வயதானவுடன் ஓய்வூதியம் கிடைக்கும்.
அடல் பென்ஷன் திட்டத்தின் படிவத்தை பதிவு செய்த பிறகு ஆட்டோ டெபிட் முறையில் பணம் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். வரி செலுத்தும் வரம்பிற்குள் வராதவர்கள் மட்டும்தான் இந்த திட்டத்தின் பலனை அனுபவிக்க முடியும்.
மேலும் படிக்க | வரியை சேமிக்க சூப்பர் டிப்ஸ்: இந்த கார்டு மூலம் வரி கட்டினால் 16% வரை சேமிக்கலாம்
அடல் பென்ஷன் திட்டம்: இதற்கு விண்ணப்பிப்பது எப்படி
அடல் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்வதற்கு ஏதாவது ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கை தொடங்க வேண்டும். உங்களிடம் ஏற்கனவே சேமிப்பு கணக்கு இருந்தால் அந்த வங்கியில் இருந்து அடல் ஓய்வூதியத் திட்டத்திற்கான படிவத்தை பெறலாம். இந்த படிவத்தில் பெயர், வயது, மொபைல் எண், வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்களை சரியாக நிரப்ப வேண்டும். இத்திட்டத்தில் சேருவதற்காக கேட்கப்படும் அனைத்து ஆவணங்களையும் இதனுடன் அட்டாச் செய்ய வேண்டும். இதன் பிறகு இந்த படிவத்தை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைனிலும் இதற்கு விண்ணப்பிக்கலாம்
https://enps.nsdl.com/eNPS/NationalPensionSystem.html என்ற இணையதளத்திற்கு சென்று அடல் ஓய்வூதிய திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முன் இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்:
- அடல் ஓய்வூதிய திட்டத்தில் இந்திய குடிமக்கள் மட்டுமே சேர முடியும்.
- இதில் சேர உங்கள் வயது 18 முதல் 40 -க்குள் இருக்க வேண்டும்.
- உங்கள் வங்கிக் கணக்கு ஆதார் கார்டுடன் கண்டிப்பாக இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
- இதில் சேர ஏதாவது ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு இருக்க வேண்டும்.
- ஓய்வூதியம் பெற குறைந்தபட்சம் 20 ஆண்டுகளுக்கு இதில் முதலீடு செய்வது அவசியமாகும்.
கோடிக்கணக்கான மக்களுக்கு நன்மைகளை அளிக்கும் இந்த ஓய்வூதியத் திட்டத்தின் தொகை பட்ஜெட்டில் அதிகரிக்கப்பட்டால், அது இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ