ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், ஹுருன் இந்தியாவின் பட்டியலில் நாட்டின் மதிப்புமிக்க தனியார் நிறுவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 16,297 கோடி ரூபாய் வரி செலுத்தி அதிக வரி செலுத்தும் நிறுவனமாகவும் ரிலையன்ஸ் நிறுவனம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.
பில்லியனர் தொழிலதிபர் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், ஹுருன் இந்தியாவின் பட்டியலில் நாட்டின் மதிப்புமிக்க தனியார் நிறுவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட பர்கண்டி பிரைவேட்-ஹுருன் இந்தியா 500 பட்டியலில் (Burgundy Private-Hurun India 500 list) ரிலையன்ஸ் ரூ.16.4 லட்சம் கோடி மதிப்பீட்டில் முதலிடம் பிடித்துள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) ரூ.11.8 லட்சம் கோடி மதிப்பீட்டில் இரண்டாவது இடத்தையும், எச்டிஎஃப்சி வங்கி ரூ.9.4 லட்சம் கோடி மதிப்பீட்டில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
அதிக வரி செலுத்தும் நிறுவனம் ரிலையன்ஸ்
ரிலையன்ஸ் நிறுவனம் 16,297 கோடி ரூபாய் செலுத்தி அதிக வரி செலுத்தும் நிறுவனமாகவும் உள்ளது என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 2022-23 நிதியாண்டில், ரூ.67,845 கோடி லாபத்துடன் அதிக லாபம் ஈட்டிய நிறுவனமாகவும் இருந்தது.
மேலும் படிக்க | MET City: டெல்லி-என்சிஆர் அருகே கனவு நகரத்தை உருவாக்கும் ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி!
பட்டியலிடப்படாத மூன்றாவது பெரிய நிறுவனம் பைஜு
இந்த பட்டியலில், தடுப்பூசி தயாரிப்பாளரான செரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ரூ.1.92 லட்சம் கோடி மதிப்பீட்டில் நாட்டின் மிகவும் மதிப்புமிக்க பட்டியலிடப்படாத நிறுவனமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
1.65 லட்சம் கோடி மதிப்புடன் இரண்டாவது இடத்தில் இருந்த தேசிய பங்குச் சந்தையை பின்னுக்குத் தள்ளியது சீரம். அதே நேரத்தில், பைஜூஸ் ரூ.69,100 கோடி மதிப்பீட்டில் பட்டியலிடப்படாத மூன்றாவது பெரிய நிறுவனமாக இருந்தது.
பட்டியலில் 500 நிறுவனங்கள்
அக்டோபர் 30, 2022 முதல் ஏப்ரல் 30, 2023 வரையிலான காலகட்டத்தில் சிறந்த 500 இந்திய நிறுவனங்களின் மதிப்பீட்டில் ஏற்பட்ட மாற்றத்தை இந்தப் பட்டியல் பதிவு செய்கிறது. இது இந்தியாவின் மதிப்புமிக்க 500 தனியார் துறை நிறுவனங்களின் பட்டியல்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் மதிப்பீடு என்ன?
இந்த ஆறு மாதங்களில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் மதிப்பு 5.1 சதவீதம் குறைந்துள்ளது, அதாவது ரூ.87,731 கோடி. இந்த காலகட்டத்தில், டிசிஎஸ்-ன் மதிப்பு 0.7 சதவீதமும், எச்டிஎஃப்சி வங்கியின் மதிப்பீடு 12.9 சதவீதமும் அதிகரித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ