ஆறு மாத சலுகை காலத்தில் கடன் தவணைகள் மீதான வட்டி தள்ளுபடி செய்யப்படுமா? என்பது குறித்து முன்று நாளில் முடிவு எடுக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவு...
தடைக்காலத்தில் EMI-களுக்கு ஏற்படும் வட்டி வங்கிகளால் வசூலிக்கப்படலாமா என்பதை தீர்மானிக்க வார இறுதியில் நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டுமாறு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேட்டுக் கொண்டது.
கொரோனா லாக்டவுனால் 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கும் வட்டி விதிக்கப்படுமா? என்பது குறித்து நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் வங்கிகளிடம் இருந்து பெற்ற கடன் தவணைகளை திருப்பி செலுத்த 6 மாத அவகாசத்தை ரிசர் வங்கி வழங்கியது. கடன் தவணைகளை திருப்பிச் செலுத்தாத இந்த காலம் சிபிலில் சேர்க்கப்படாது எனவும் கூறப்பட்டது.
READ | Post Office Small Savings Schemes: பணம் மூழ்கும் பயம் இல்லை.. பாதுகாப்பான நிலையான வருமானம்
இதனால் வங்கிகளில் கடன் பெற்ற பலரும் தவணை ஒத்திவைப்பு சலுகையை பயன்படுத்தினர். ஆனால் வங்கிகளோ, தவனை ஒத்திவைப்பு காலத்துக்கும் ஒரு வட்டியை வசூலிப்போம் என நடவடிக்கை மேற்கொண்டது. இது வங்கி கடன் பெற்றவர்களை பெரும் அதிர்ச்சி அடைய வைத்தது. வங்கிகளின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, கடன்களுக்கு தவணை மற்றும் வட்டி செலுத்துவதில் எந்த பிரச்சனையும் இல்லை. அதில் நீதிமன்றம் தலையிடவில்லை.
ஆனால் தவணை ஒத்திவைப்பு சலுகை காலத்துக்கும் வட்டி விதிக்கப்பட்டுள்ளதுதான் கவலை அளிக்கிறது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகம் 3 நாட்களில் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூலை 17 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.