தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சாதனை அளவை எட்டியது. ஆனால், அதன் பிறகு ஓரளவு சரிவு ஏற்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் தங்கத்தின் வாங்குவதை அதிகரித்ததை அடுத்து தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் பொருளாதார பின்னடைவும், பணவீக்கமும் அதிகரித்து வரும் நிலையில் தங்கத்தின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
உலக தங்க கவுன்சில் (WGC)
உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கிகள் 2023 ஆம் ஆண்டில் 1,037 டன் தங்கத்தை வாங்கியுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டான 2022இல், மத்திய வங்கிகள் 1,082 டன் தங்கம் வாங்கப்பட்டது. நடப்பு ஆண்டில் (2024) ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதத்திற்குள் மட்டும் 290 டன் தங்கத்தை மத்திய வங்கிகள் கொள்முதல் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
2023ல் 1037 டன் தங்கம் கொள்முதல்
இந்திய ரிசர்வ் வங்கி உட்பட உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் 2023 ஆம் ஆண்டில் 1,037 டன் தங்கத்தை வாங்கியுள்ளன. 2022 இல் 1,082 டன்கள் வாங்கிய நிலையில், அதற்கு அடுத்த ஆண்டே இந்த அளவு தங்கம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது சர்வதேச அளவில் உள்ள பொருளாதார நிலையின்மையைக் குறிப்பதாக கூறப்படுகிறது.
2024 ஜனவரி-மார்ச் மாதங்களில் மத்திய வங்கிகள் இதுவரை 290 டன் தங்கத்தை வாங்கியுள்ளன. அடுத்த 12 மாதங்களில் மத்திய வங்கிகள் இன்னும் அதிகம் தங்கம் வாங்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர். WGC நடத்திய ஆய்வில் உள்ள 70 மத்திய வங்கிகளில் இந்த ஆண்டு அதிகாரப்பூர்வ துறையின் தங்க கையிருப்பு கணிசமாக அதிகரிக்கும் என்று கூறியுள்ளன.
மேலும் படிக்க | வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்? வரம்பை மீறினால் சிக்கல்... ஜாக்கிரதை!!
தங்கத்தின் தேவை அதிகரிப்பு
தங்கத்தின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு மத்தியில், தங்கத்தின் விலை எந்த வேகத்தில் உயரும் என்பதுதான் அனைவரின் கேள்வியக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியையின் போது தங்கத்தின் தேவை அதிகரிக்கும் என்பதைத் தவிர, பொதுமக்களால் பெரிய அளவில் தங்கத்தின் விலை உயர்வை கணிக்கமுடியாது.
நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது, தங்கத்தின் விலை என்பது உலகளவில் அதிகரித்து வரும் தேவை மற்றும் நாணய மதிப்பு குறைவது ஆகியவற்றால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயரும். சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலர் பலவீனம், வட்டி விகிதக் குறைப்பு எதிர்பார்ப்பு, அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றம், உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம், மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்குவது போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.
ஐந்து ஆண்டுகளில் தங்கத்தின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது
தங்கம் ஏற்கனவே முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக உள்ள நிலையில், தங்கம் வாங்குவது நல்ல லாபம் கொடுக்கும் என்பதால் விலை உயர்வு அதிகரிக்கும். உள்நாட்டில் தங்கத்தின் விலை கடந்த ஐந்து ஆண்டுகளில் இருமடங்காகவும், கடந்த 20 ஆண்டுகளில் 10 மடங்குக்கும் அதிகமாகவும் அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு, அட்சய திருதியையின் போது, தங்கத்தின் விலை சுமார் 72000 ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி, அட்சய திருதியையையொட்டி, 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.61,300 ஆக இருந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை சுமார் 12 சதவீதம் உயர்ந்துள்ளது.
எதிர்வரும் மாதங்களிலும் தங்கத்தின் விலை அதிகரிக்கும். வரும் காலங்களில் தங்கத்தின் விலை சந்தையை ஆச்சரியப்படுத்தக்கூடும். அடுத்த அட்சய திருதியைக்குள் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 1 லட்சத்தை தாண்டினாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ