Gold / Silver Price Today, March 28, 2021: தங்கத்தின் விலை 7,600 ரூபாய் குறைந்தது

தங்கத்தின் விலை இன்று 100 கிராமுக்கு ரூ .7,600 குறைந்துள்ளது.பொன்னின் விலை குறைவைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ .43,920 என்று குட் ரிட்டர்ன்ஸ் வலைத்தளம் கூறுகிறது. விலைமதிப்பற்ற உலோகத்தின் விலை, சற்றே சரிவைக் கண்டு வந்த நிலையில், தற்போது மேலும் அதல பாதாளத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 28, 2021, 01:34 PM IST
  • தங்கத்தின் விலை இன்று 100 கிராமுக்கு ரூ .7,600 குறைந்துள்ளது
  • கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை இறங்கு முகத்தில்...
  • வாடிக்கையாளர்களுக்கு கொண்டாட்டம், வியாபாரிகளுக்கு திண்டாட்டம்...
Gold / Silver Price Today, March 28, 2021: தங்கத்தின் விலை 7,600 ரூபாய் குறைந்தது  title=

புதுடெல்லி: தங்கத்தின் விலை இன்று 100 கிராமுக்கு ரூ .7,600 குறைந்துள்ளது.பொன்னின் விலை குறைவைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ .43,920 என்று குட் ரிட்டர்ன்ஸ் வலைத்தளம் கூறுகிறது. விலைமதிப்பற்ற உலோகத்தின் விலை, சற்றே சரிவைக் கண்டு வந்த நிலையில், தற்போது மேலும் அதல பாதாளத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.

இது பொதுமக்களுக்கு நல்ல செய்தியாக இருக்கலாம், நகை வாங்க விரும்புபவர்களும், முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கும் கொண்டாட்டமாக இருக்கும். ஆனால், வியாபரிகளுக்கு இந்த வாரம் தங்கத்தின் பளபளப்பு மங்கிவிட்டதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த வார தொடக்கத்தில், ஏப்ரல் விநியோகத்திற்கான தங்கத்தின் விலையானது, 10 கிராமுக்கு ரூ .44,974 என்ற நிலையில் தொடங்கியது. இருப்பினும், ஒரு நாள் கழித்து, இது 100 கிராமுக்கு ரூ .100 குறைந்தது. 

ALSO READ: Gold Rates Today: இன்று தங்கம் வாங்கலாமா? இன்றைய தங்க விலை நிலவரம் எப்படி உள்ளது?

மார்ச் 23 அன்று, மஞ்சள் உலோகத்தின் விலை 100 கிராமுக்கு 1,200 ரூபாய் குறைந்தது. இதேபோல், புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் தங்கத்தின் விலையில் சரிவு தொடர்ந்தது. 

முக்கிய நகரங்களில் இன்று 22 காரட் மற்றும் 24 காரட் தங்க விலை

gold

குட் ரிட்டர்ன்ஸ் வலைத்தளத்தின்படி, டெல்லியில் 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .44,050, மும்பையில் ரூ .43,000. சென்னையில், விலைமதிப்பற்ற உலோகத்தின் விலை ரூ .42,320. குஜராத்தின் வதோதரா மற்றும் அகமதாபாத் போன்ற நகரங்களில், மஞ்சள் உலோகம் ரூ .44,440 க்கு வர்த்தகம் செய்யப்பட்டது (10 கிராம் 22 காரட் தங்கத்திற்கு).

பொறுப்பு துறப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள 22 காரட் மற்றும் 24 காரட் தங்கத்தின் விலைகள் ஷோரூம் விலைகள் அல்ல. சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி), டிசிஎஸ் மற்றும் பிற வரிகளை கூட்டும்போது, தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்படலாம். அதோடு, கலால் வரி, மாநில வரி மற்றும் பிற வரிகளின் அடிப்படையில் மாநிலத்திற்கு மாநிலம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் மாறுபடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ALSO READ: இனி தங்கத்தின் தூய்மை பற்றிய கவலை வேண்டாம்: BIS Care Mobile App உங்களுக்கு உதவும்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News