பெட்ரோல், டீசல் வாகனம் Vs மின்சார வாகனம்.. ஒரு அலசல்..!!!

பெட்ரோல், டீசல் விலை, நாளுக்கு நாள் ஏறிக் கொண்டிருக்கும் நிலையில், செலவை குறைக்க பலர் மின்சார வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். இனி வருங்கால சந்தையில், மின்சார வாகனங்கள் தான் ஆதிக்கம் செலுத்தும் என்றால் அது மிகை அல்ல.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 8, 2021, 11:27 PM IST
  • பெட்ரோல், டீசல் விலை, நாளுக்கு நாள் ஏறிக் கொண்டிருக்கும் நிலையில், செலவை குறைக்க பலர் மின்சார வாகனங்களுக்கு மாறி வருகின்றனர்.
  • இனி வருங்கால சந்தையில், மின்சார வாகனங்கள் தான் ஆதிக்கம் செலுத்தும் என்றால் அது மிகை அல்ல.
  • உலக நாடுகளும், மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கின்றனர்.
பெட்ரோல், டீசல் வாகனம் Vs மின்சார வாகனம்.. ஒரு அலசல்..!!! title=

பெட்ரோல், டீசல் விலை, நாளுக்கு நாள் ஏறிக் கொண்டிருக்கும் நிலையில், செலவை குறைக்க பலர் மின்சார வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். இனி வருங்கால சந்தையில், மின்சார வாகனங்கள் தான் ஆதிக்கம் செலுத்தும் என்றால் அது மிகை அல்ல.

சுற்று சூழல் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், உலக நாடுகளும், மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கின்றனர். பிரிட்டன் 2040 ஆம் ஆண்டிற்குள் பெட்ரோல் டீசல் வாகன உற்பத்தியை நிறுத்துவதாக முன்னதாக அறிவித்தது. ஆனால், தற்போது அந்த இலக்கை 2030 ஆம் ஆண்டாக குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாகனங்கள் வாங்குபவர்களின் மனதில் எழும் முதல் கேள்வி, வாகனத்தின் பராமரிப்பு செலவு என்னவாக இருக்கும் என்பது தான். ஏனெனில் வாகனம் வாங்குவது எளிது. எளிதாக வாகன கடன்கள் கிடைக்கின்றன. ஆனால், அதனை பராமரிக்கும் செலவு கையை கடிக்காமல் இருக்க வேண்டும் என்பது பொதுவான மக்களின் விருப்பமாக உள்ளது. 

பராமரிப்பை பொறுத்தவரையில்,  பெட்ரோல், டீசல் கார்களுடன் ஒப்பிட்டால், மின்சார வாகனங்களின் பராமரிப்பு செலவு மிகமிக குறைவாக உள்ளது. அதாவது கிட்டத்தட்ட பாதி அளவு குறைவாகவே செலவு ஆகும். 
மின்சார வாகனங்கள் பற்றி பேசும் போது, மனதில் எழும் மற்றொரு கேள்வி, பேட்டரி தீர்ந்து விட்டால் எங்கு சார்ஜ் செய்வது என்பது தான். நிச்சயம் வருங்காலத்தில் இதற்கான கட்டமைப்புகள் நிச்சயம் வலுவாக்கப்படும் என்பதோடு, ஸ்பேர் பேட்டரி வசதியும் உள்ளது. அதாவது ஒரு பேட்டரி தீர்ந்து விட்டால், மற்றொரு பேட்டரியின் மூலம் இயக்கலாம். 

இது தவிர இதில் உள்ள முக்கிய சிறப்பம்சம், இது மென்மையாக இயங்குவதோடு, அதிக சத்தம் எழுப்புவதில்லை. அதாவது சுற்றுசூழலை பாதிக்கும் வகையில் வெளியாகும் புகை மிக குறைவு என்பதோடு, சத்தமும் மிகக்குறைவு. 

மின்சார வாகனங்களில் (Electricity Vehicle) பாகங்கள் பழுதாகும் வாய்ப்பு குறைவு என்பதால், அந்த வகையிலும் அதன் பராமரிப்பு செலவு குறைவாக இருக்கும். அதனால் அதன் டிப்ரிஷியேடிங் வேல்யு, அதாவது தேய்மானத்தினால் ஏற்படும் வாகனத்தின் மதிப்பு குறைவு என்பது கிட்டதட்ட இல்லாமல் இருக்கும். அதனால், வாகனத்தை மறுவிற்பனை செய்யும் போது கூடுதல் மதிப்பு கிடைக்கும்.

ALSO READ |Vehicle Scrapping Policy: பழைய வாகனங்களை மாற்றுவதற்கான ஊக்க திட்டம் விரைவில்..!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News