Paytm FASTagல் இருக்கும் இருப்பைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்! விளக்கம் சொல்லும் பேடிஎம்!

Paytm Attention To FASTag Users: மொபைல் வாலட் வணிகத்தை நிறுத்துமாறு பேடிஎம் நிறுவனத்திற்கு ஆர்பிஐ உத்தரவிட்ட நிலையில், FASTag பயனர்களுக்கு முக்கிய செய்தியை பேடிஎம் அறிவித்துள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 1, 2024, 08:05 PM IST
  • பேடிஎம் பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய செய்தி
  • கவலைப்பட வேண்டாம் என பேடிஎம் ஆறுதல்
  • வாடிக்கையாளருக்கு எக்ஸ் தளத்தில் செய்தி வெளியிட்ட பேடிஎம்
Paytm FASTagல் இருக்கும் இருப்பைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்! விளக்கம் சொல்லும் பேடிஎம்! title=

பிரபலமான மொபைல் வாலட் வணிகத்தை நிறுத்துமாறு, பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் (Paytm Payments Bank (PPBL)) வங்கிக்கு மத்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதை உடனடியாக நிறுத்துமாறு PPBL க்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. தற்போது, பிரபலமான மொபைல் வாலட் வணிகத்தை மற்ற செயல்பாடுகளுடன் சேர்த்து நிறுத்துமாறு உத்தரவிடப்பட்ட நிலையில், தற்போது பேடிஎம் நிறுவனம் (Paytm) அதன் FASTag பயனர்களுக்கு முக்கியமான அறிவுறுத்தலை பகிர்ந்துக் கொண்டுள்ளது. 

"நீங்கள் தொடரலாம்..." என்று அது தனது டிவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது. 

பிப்ரவரி 29க்குப் பிறகு, பேடிஎம்மின் வாடிக்கையாளர் கணக்குகள், வாலட்கள், FASTags மற்றும் பிற கருவிகளில் டெபாசிட் அல்லது டாப்-அப்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்துமாறு இந்திய ரிசர்வ் வங்கி, Paytm-ஐ கேட்டுக் கொண்டுள்ளதை அடுத்து நிறுவனம் இந்த டிவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளது.

FASTag பற்றிய விளக்கத்துடன் பதிலளித்த நிறுவனம், "உங்கள் Paytm FASTagல் இருக்கும் இருப்பைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். கடந்த இரண்டு ஆண்டுகளில் மற்ற வங்கிகளுடன் இணைந்து பணியாற்றி வந்தோம். அதை இப்போது மேலும் துரிதப்படுத்துவோம். தடையற்ற வாடிக்கையாளர் அனுபவத்தை உறுதிசெய்ய பயனுள்ள தீர்வுகளை கண்டறியும் வேலைகளை மேற்கொண்டுள்ளோம்" என்று நிறுவனம் X வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. 

மேலும் படிக்க | Paytm Payments Bank -க்கு எதிராக ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கை

"பிப்ரவரி 29, 2024க்குப் பிறகு, வேறு எந்த வங்கிச் சேவைகளும், நிதிப் பரிமாற்றங்கள் (AEPS, IMPS போன்ற சேவைகளின் பெயர் மற்றும் தன்மையைப் பொருட்படுத்தாமல்), BBPOU மற்றும் UPI வசதிகளை வங்கி வழங்கக்கூடாது" என்று மத்திய அரசு நேற்றைய உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான One97 Communication Limited (OCL) பல்வேறு வங்கிகளுடன் இணைந்து செயல்படுவதாக தெரிகிறது.

மேலும் படிக்க | EPS-95: ஓய்வூதியதாரர்களின் போராட்டம்....குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிக்க கோரிக்கை

"பிப்ரவரி 29, 2024க்குள் OCL மற்றும் Paytm Payments Services Limited (PPSL) நோடல் கணக்கை நிறுத்த வேண்டும் என்பதால்,  OCL மற்றும் PPSL இந்த காலகட்டத்தில் நோடலை மற்ற வங்கிகளுக்கு மாற்றும். பல்வேறு வங்கிகளுடன் OCL இணைந்து பணியாற்றும்" என்று Paytm அறிவித்துள்ளது.  

சேமிப்பு வங்கிக் கணக்குகள் (Savings Bank Accounts), நடப்புக் கணக்குகள் (Current Accounts), ப்ரீபெய்ட் கருவிகள், FASTagகள், தேசிய பொது மொபைலிட்டி கார்டுகள் என தங்கள் கணக்குகளில் இருந்து  பண இருப்பை எடுக்கவோ பயன்படுத்த வாடிக்கையாளர்கள் எந்த கட்டுப்பாடுகளும் இன்றி அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.  

மேலும் படிக்க | Med Tech: வலுவான ஒழுங்குமுறை கட்டமைப்புடன் மருத்துவ தொழில்நுட்பத்தில் முன்னேறத் துடிக்கும் இந்தியா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News