வாரிசு சான்றிதழ் யாருக்குத் தேவை? யாருக்கு தேவையில்லை? சட்டப்பூர்வ வாரிசுகள் யார்?

Legal Heirs Certificate: சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழை ரத்து செய்ய முடியுமா? அதற்கான காரணங்கள் என்ன? யாருக்கு எதற்காக இந்த சான்றிதழ் தேவை?   

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 6, 2024, 04:57 PM IST
  • எப்போது வாரிசு சான்றிதழ் தேவைப்படும்?
  • வாரிசு சான்றிதழின் முக்கியத்துவம்
  • யார் வாரிசு சான்றிதழை கொடுப்பார்கள்?
வாரிசு சான்றிதழ் யாருக்குத் தேவை? யாருக்கு தேவையில்லை? சட்டப்பூர்வ வாரிசுகள் யார்? title=

ஒருவர் இறந்தவுடன் அவர் பெயரில் உள்ள சொத்துக்கள் மீது யாருக்கு உரிமை உள்ளது என்பதை தீர்மானிக்கும் முக்கியமான ஆவணம் வாரிசுச் சான்றிதழ் ஆகும். சொத்தை, அவரது குடும்பத்தினர் (அவரது வாரிசுகள்) அனைவரும் பிரச்சினையில்லாமல் பகிர்ந்து கொள்வதற்கு வாரிசுச் சான்றிதழ் அவசியமாகும்.

ஒருவரின் மரணத்திற்குப் பிறகு, சொத்துக்கள் (அசையும் மற்றும் அசையா சொத்துக்கள்), பணம், நகை என சொத்துக்களுக்கு மட்டும் வாரிசுகள் உரிமைதாரர்கள் அல்ல, இறந்தவர்களுக்கு உரிய கடன்கள் மற்றும் பொறுப்புகளுக்கும் இந்த வாரிசுகள் தான் கடமைப்பட்டவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. ஆனால், சொத்து இருப்பவர்கள் மட்டும் தான் வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பிப்பார்கள் என்பதும், கடன் இருப்பவர்கள் இந்த சட்ட ஆவணத்தை பெறுவது அபூர்வமான நிகழ்வாகும். 

இறந்தவர் கடன் தர வேண்டியிருக்கும் நிலையில், அவரது வாரிசுகள் அதை மறுக்கும்போது, சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்காக, கடன் வழங்கியவர்கள், யார் சட்டப்பூர்வ வாரிசுகள் என்பதை தெரிந்துக் கொள்ள இந்த வாரிசுச் சான்றிதழை பயன்படுத்தலாம். ஆனால், கடன் வழங்கியவர்கள் அவ்வாறு வாரிசுச் சான்றிதழை வாங்கிவிட முடியாது.

எனவே சொத்துகளின் உரிமையை பெறுவதற்கு வாரிசுச் சான்றிதழ் என்ற சட்ட ஆவணம் அவசியமானது.

மேலும் படிக்க | ரிசர்வ் வங்கி விதித்த கடும் அபராதத்தால் ஐசிஐசிஐ & யெஸ் வங்கிகளுக்கு என்ன பாதிப்பு?

வாரிசுச் சான்றிதழை எங்கிருந்து பெறுவது?

குடும்பத் தலைவர் அல்லது சொத்து உள்ள ஒருவர் இறந்துவிட்டால் அவரின் சொத்துக்கள் மற்றும் பணத்தையோ பெறுவதற்கு இறந்தவரின் வாரிசுக்கு வாரிசுச் சான்றிதழ் (Legal Heir Certificate) தேவைப்படும். இந்தச் சான்றிதழை வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். 

வாரிசுச் சான்றிதழின் பயன்கள்

ஒருவரின் மரணத்திற்குப் பிறகு அவருடைய தாய், மனைவி/கணவன், திருமணம் ஆன/ஆகாத மகன், மகள்கள் வாரிசுகள் ஆகிறார்கள். 

வாரிசுச் சான்றிதழ் எப்போது அவசியமாகிறது?

நிதி நிறுவனங்களில் அல்லது வங்கிகளில் உள்ள சேமிப்பு அல்லது வைப்புத் தொகையைப் பெறுவதற்கும், கருணை அடிப்ப டையில் இறந்தவர் சார்பாக வேலைவாய்ப்புப் பெறவும் வாரிசுச் சான்றிதழ் தேவை. அதேபோல, இறந்தவருடைய சொத்துக்களை விற்பதற்கோ அடமானம் வைப்பதற்கோ  வாரிசுச் சான்றிதழ் தேவைப்படும்.

அரசு பணியாளர்களின் வாரிசுகளுக்கு வாரிசுச் சான்றிதழ்

பொதுத்துறை நிறுவனங்களில் அல்லது அரசுப் பணிகளில் பணிபுரிந்தவர் மரணமடைந்தால், இறந்தவர்களின் குடும்ப ஓய்வூதியம் (Family Pension) மற்றும் வேறு பலன்களை பெறுவதற்கும், பட்டா போன்ற வருவாய் ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வதற்கும் வாரிசுச் சான்றிதழ் அவசியம் ஆகும்.

வாரிசுச் சான்றிதழ் வாங்க தேவைப்படும் ஆவணங்கள்

இறந்தவரின் இறப்புச் சான்றிதழ்

முகவரிச் சான்றுகள்

புகைப்படம்

சட்டப்பூர்வ வாரிசுகளின் அடையாளச் சான்றுகள் (ஆதார், ரேஷன் அட்டை) முகவரி

புகைப்படங்கள்

மேலும் படிக்க | அதிக வட்டி தரும் சிறப்பு ஃபிக்சட் டெபாசிட்கள்! ஜூன் 30க்கு பிறகு இந்த பிளான்கள் இருக்காது!

வாரிசுச் சான்றிதழுக்கு எப்போது விண்ணப்பிக்கலாம்

ஒருவர் இறந்து பல ஆண்டுகள் கழித்தும் வாரிசுச் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கலாம். நீண்ட காலம் கழித்து வாரிசுச் சான்றிதழ் வாங்குபவர்கள், தங்கள் வசிப்பிடத்திற்கு அருகிலுள்ள உரிமையியல் நீதிமன்றத்தில் விண்ணப்பித்து, வழக்கறிஞர் மூலம் பிரபல தமிழ் நாளிதழில் வாரிசு சான்றிதழ் கோரியுள்ள விளம்பரத்தை வெளியிட வேண்டும். அதற்கு 15 நாட்களுக்குள் ஆட்சேபம் ஏதும் வராத நிலையில், அந்த தகவலை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். அதன்பிறகு, இது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர் அதனை வட்டாட்சியர் அவர்களிடம் சமர்ப்பித்து சான்றிதழ் பெறலாம்.

விண்ணப்பித்து எத்தனை நாட்களில் வாரிசு சான்றிதழ் கிடைக்கும்?

விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்கப்படும். காலதாமதம் ஆனால், தாமதத்திற்கான அல்லது சான்றிதழைத் தர மறுப்பதற்கான காரணத்தை வட்டாட்சியர் தெரிவிக்க வேண்டும்.

வாரிசு சான்றிதழ் மறுக்கப்படக்கூடிய காரணங்கள்

இறந்தவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்து அவர்களிடையே பிரச்சினைகள் இருப்பது

தத்து எடுக்கப்பட்டவர் தான் தான் வாரிசு என்று கோரிக்கை உரிமை கோருவது

நேரடி வாரிசாக இல்லாத ஒருவர் வாரிசுச் சான்றிதழ் கோருவது

வாரிசு சான்றிதழ் பிரச்சனையை தீர்ப்பது எப்படி?

வாரிசு சான்றிதழ் கோருபவர்களுக்கு அது மறுக்கப்படும்போது, சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுகி, வாரிசுச் சான்றிதழ் வழங்குவது தொடர்பான உத்தரவு பெற்று வட்டாட்சியரிடம் வழங்க வேண்டும்.

போலி வாரிசுச் சான்றிதழ்

போலியான ஆவணங்கள் மூலம் வாரிசு சான்றிதழ் பெறப்பட்டிருப்பது தெரியவந்தால், அந்த சொத்துக்களின் உண்மையான வாரிசுகள் எப்போது வேண்டுமானாலும் நீதிமன்றதை அணுகி அந்த வாரிசு சான்றிதழை ரத்து செய்ய முடியும்.

மேலும் படிக்க | பங்குச்சந்தையில் மிகப்பெரிய மாற்றம்! இது செபி எடுக்கும் மோசடி தவிர்ப்பு நடவடிக்கைகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News