இடைத்தேர்தல் தோல்விக்கு காரணம் முதல்வர் யோகி ஆதித்யநாத் என அமைச்சர் ராஜ்பார் கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது!
அண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் உத்தர பிரதேசத்தில் பாஜக தோல்வியடைந்ததற்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் காரணம் ன் கூறியிருப்பது பாஜக-வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா உட்பட 10 மாநிலங்களில் உள்ள 4 மக்களவை, 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில், உத்தரப் பிரதேசத்தில் கைரானா மக்களவை தொகுதி மற்றும் நூர்பூர் சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
அதில், உத்தரப் பிரதேசத்தில் பாஜக தோல்வியடைந்தது. இதையடுத்து, அமைச்சர் ராஜ்பார் என்பவர் சமீபத்திய இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து வெளியிட்டுள்ள கருத்தில், இடைத்தேர்தல் தோல்விக்கு காரணம் முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் தலித் சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை அரவணைத்து சென்றாலே நமக்கு வெற்றி கிட்டும் என்று கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாதுக்கு எதிராக அவரது அமைச்சர் ஒருவர் கருத்து கூறியிருப்பது பா.ஜ.க-வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வருக்கு எதிரான அவரது கருத்து குறித்து பா.ஜ.க-வில் உயர்மட்ட தலைவர்களும் வாய்திறக்க மறுத்து விட்டனர்!