Health News: கொத்து கொத்தாய் ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும் கொத்தமல்லி!!

எளிதாக கிடைக்கும் கொத்தமல்லியில் எவ்வளவு அதிக ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பது பலருக்குத் தெரிவதில்லை. பல வித நோய்களுக்கு இது தீர்வாக விளங்குகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 14, 2021, 08:33 PM IST
  • பச்சை கொத்தமல்லி கண்களுக்கு நன்மை பயக்கும்.
  • பச்சை கொத்தமல்லி இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது.
  • பச்சை கொத்தமல்லியை பயன்படுத்தினால் மலச்சிக்கல் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.
Health News: கொத்து கொத்தாய் ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும் கொத்தமல்லி!!  title=

சில நேரங்களில் நமக்கு எளிதாகக் கிடைக்கும் பல விஷயங்களின் மகத்துவம் நமக்கு தெரியாமல் போய்விடுகிறது. அவற்றின் முக்கியத்துவத்தை நாம் அறிந்துகொள்ளாமல் போய் விடுகிறோம். அப்படிப்பட்ட ஒன்றுதான் கொத்தமல்லி.

எளிதாக கிடைக்கும் இந்த கொத்தமல்லியில் எவ்வளவு அதிக ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பது பலருக்குத் தெரிவதில்லை.

உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சினை இருந்தாலோ அல்லது நீங்கள் நீரிழிவு நோயால் (Diabetes) பாதிக்கப்பட்டிருந்தாலோ, கொத்தமல்லி உங்களுக்கு ஏற்ற தீர்வைத் தரும். ஆம்!! இவை மட்டுமல்ல, கொத்தமல்லியில் இன்னும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. 

கொத்தமல்லி இலை முக்கியமாக உணவை அலங்கரிக்கவும் உணவின் சுவையை அதிகரிக்கவும் பயன்படுகிறது. காய்கறிகள், குழம்பு, ரசம் என அனைத்திலும் இதன் பயன்பாடு உள்ளது. சட்டினியாக அரைத்தும் இதை உட்கொள்ளவது வழக்கம். ஆனால், இவற்றை உட்கொள்வதால் நம் உடலுக்கு எத்தனை நன்மைகள் ஏற்படுகின்றன என்பது பலருக்குத் தெரிவதில்லை. 

பச்சை கொத்தமல்லி கண்களுக்கு நன்மை பயக்கும்

20 கிராம் கொத்தமல்லியை நசுக்கி, ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். இந்த தண்ணீரை (Eyes) வடிகட்டி குடித்தால் கண்களில் ஏற்படும் வலி, நீர் வடிதல் ஆகியவை குணமாகும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். 

கொத்தமல்லி இலைகளில் என்னவெல்லாம் இருக்கின்றன

பச்சை கொத்தமல்லி இலைகள் பல நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவுகின்றன. இதில் ஏராளமான பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி மற்றும் மெக்னீசியம் ஆகியவை உள்ளன.  

ALSO READ: Health News: அன்னாசிப் பழத்தின் அள்ள அள்ள குறையாத அற்புத நன்மைகள் இதோ!!

கொத்தமல்லி இலையின் 5 அற்புதமான நன்மைகள்

1. பச்சை கொத்தமல்லி காயத்தை விரைவில் குணப்படுத்தும்

பச்சை கொத்தமல்லி வாயில் உள்ள காயங்களையும் புண்களையும் குணப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள ஆண்டி-செப்டிக் பண்புகள் வாயின் காயங்களை விரைவாக குணப்படுத்த உதவுகின்றன.

2. கொத்தமல்லி விதைகள் நன்மை பயக்கும்

கொத்தமல்லி விதைகள் அதாவது தனியாவில் இருக்கும் பல வகையான கூறுகள், உடலின் கொழுப்பை கட்டுப்படுத்த உதவுகிறது. ஒருவருக்கு அதிக கொழுப்பு இருந்தால், அவர்கள் கொத்தமல்லி விதைகளை வேகவைத்து அந்த தண்ணீரை குடிக்கலாம்.

3. மலச்சிக்கல் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்

மலச்சிக்கல் பிரச்சினையால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் உணவில் கொத்தமல்லியை சேர்க்கலாம். இது வயிற்றுப் பிரச்சினைகளை சரி செய்து செரிமான சக்தியை (Digestion) பலப்படுத்துகிறது. அதன் இலைகளை மோர் கலந்து குடிப்பதால் அஜீரணம், குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் பெருங்குடல் அழற்சி ஆகியவற்றில் நிவாரணம் கிடைக்கும்.

4. சிறுநீர் பிரச்சினைக்கு தீர்வு

குளிர்காலத்தில் குறைந்த தண்ணீரைக் குடிப்பதால் சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை அதிகரிக்கும். அத்தகைய சந்தர்ப்பத்தில், கொத்தமல்லி இலைகள், சட்னி மற்றும் உலர்ந்த கொத்தமல்லி ஆகியவற்றை உணவில் சேர்ப்பது சிறுநீர் கழித்தலை சீர் செய்யும். 

5. இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது

பச்சை கொத்தமல்லி இலைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த மிகவும் உதவும். 

ALSO READ: பல வலிகளை போக்க கூடிய கிராம்பின் மருத்துவ பயன்கள் என்ன

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News