Weight Loss Tips: உடல் பருமன் இந்த காலத்தில் பலரை பாடாய் படுத்தும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. உடல் எடை அதிகமாக இருப்பது ஒரு நபரின் தன்னம்பிக்கையை குறைப்பதோடு இன்னும் பல வித நோய்களுக்கான வாயிலாகவும் அமைகின்றது. ஆகையால், உடல் எடை அதிகரிக்கத் தொடங்கினால், உடனடியாக அதை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுப்பது நல்லது.
உடல் எடை, குறிப்பாக தொப்பை கொழுப்பு (Belly Fat) மிக வேகமாக அதிகரித்து விடுகின்றது. ஆரோக்கியமற்ற உணவு முறை, வாழ்க்கை முறை, அதிகமாக சாப்பிடுவது, உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது என பல காரணங்களால் உடல் எடை மிக வேகமாக அதிகரித்து விடுகின்றது. ஆனால் இதை குறைப்பது மிகவும் கடினமான ஒரு பணியாகும். உடல் பருமனை குறைக்க மக்கள் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் சென்று உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளையும் மேற்கொள்கிறார்கள். எனினும், சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். தொப்பை கொழுப்பை கரைத்து, உடல் எடையை குறைத்து, உடலில் உள்ள நச்சுகளை நீக்க உதவும் எளிய வழி ஒன்றை பற்றி இந்த பதிவில் காணலாம். இதில் ஒரு ஆரோக்கியமான சாலட் நமக்கு உதவும்.
Weight Loss Salad: எடை இழப்பு சாலட் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள்:
- 30 கிராம் மசூர் பருப்பு
- அரை சுரைக்காய்
- 30 கிராம் பனீர்
- 2 குடைமிளகாய்
- 5 கிராம் எண்ணெய்
- சிறிது ஆரிகானோ
- சிவப்பு மிளகாய் காரத்திற்கு ஏற்ப
- கறிவேப்பிலை
- தேவைக்கு ஏற்ப உப்பு
எடை இழப்பு சாலட் செய்வது எப்படி
எடையை குறைத்து உடலை டீடாக்ஸ் செய்யும் இந்த சாலட் செய்ய, முதலில் மசூர் பருப்பை நன்றாக வேகவைக்க வேண்டும். இதன் பின்னர் இப்போது உங்களுக்கு விருப்பமான பச்சை இலைக் காய்கறிகளை எடுத்துக் கொள்ளுங்கள். விரும்பினால், சிவப்பு மற்றும் மஞ்சள் குடைமிளகாயை பயன்படுத்தலாம். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை, ஆரிகேனோ, மிளகாய், குடைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து அவற்றுடன் தேவைக்கு ஏற்ப உப்பு சேர்க்கவும். சிறிது வதங்கியவுடன் துண்டுகளாக வெட்டிய பனீர் மற்றும் பச்சை காய்கறிகளை சேர்க்கவும். நன்கு கிளறிய பின்னர், இதில் சிறிய அளவு தயிர் சேர்க்கவும் (தேவைப்பட்டால்). ஆரோக்கியமான சாலட் தயார் ஆகிவிட்டது.
எடை இழப்பு மற்றும் டிடாக்ஸ் சாலட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
- இந்த சாலட்டை சாப்பிடுவதால் பண்டிகை காலங்களில் நாம் உட்கொள்ளும் பல வித உணவுகளால் நம் உடலில் சேரும் நச்சுகள் நீக்கப்படுகின்றன.
- இதனால் அதிகமாக சாப்பிடுவதால் அதிகரிக்கும் எடையும் குறைகிறது.
- இதை சாப்பிடுவதால் உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்குகிறது.
- இந்த சாலட் உடலில் புரதச்சத்து குறைபாட்டையும் பூர்த்தி செய்கிறது.
- இதை பகலில் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ரெட் அலெர்ட்... நெய் சாப்பிடுகிறீர்களா? கொஞ்சம் இதை தெரிஞ்சுக்கோங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ