Best Vegetarian Foods Rich in Vitamin B12: வைட்டமின் பி 12 உடலுக்கு மிகவும் அவசியமான ஊட்டச்சத்து ஆகும். இரத்த சிவப்பணுக்களை உருவாக்கும் வைட்டமின் பி12, டிஎன்ஏ, மூளை மற்றும் நரம்புகளின் செயல்பாட்டிற்கு அவசியம். வைட்டமின் பி12 குறைபாட்டால், மூளையின் செயல்பாடு குறைகிறது. டிஎன்ஏ சேதமடைகிறது மற்றும் உடலில் இரத்தம் குறையத் தொடங்குகிறது. பி12 குறைபாடு எலும்புகளிலும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது,
இந்நிலையில், வைட்டமின் பி 12 குறைப்பாட்டை நீக்கவும், வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படாமல் இருக்கவும் உதவும் உணவுப் பொருட்களை அறிந்து கொள்ளலாம். அசைவ உணவுகளில் அதிக வைட்டமின் பி12 உள்ளது என்பது உண்மை தான். ஆனால், சில சைவ உணவுகளிலும் அதிக அளவில் வைட்டமின் பி12 உள்ளது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள சைவ உணவுகளை உட்கொள்வதன் மூலம் வைட்டமின் பி12 குறைபாட்டை நீக்கலாம்
1. பால் பொருட்கள்
பால் மற்றும் பால் பொருட்களிலும் வைட்டமின் பி12 ஏராளமாக உள்ளது. தினமும் பால், தயிர் அல்லது சீஸ் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால், வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படாது.
2. சோயா மற்றும் டோஃபு
வைட்டமின் பி12 குறைபாட்டை சோயாபீன் அல்லது சோயா உணவுகளான சோயா பால் மற்றும் டோஃபு போன்ற உணவுகளை சாப்பிடுவதன் மூலமும் போக்கலாம். மேலும், சோயா மற்றும் டோஃபு ஆகியவற்றிலும் அதிக புரதச்சத்து உள்ளது. இது கால்சியத்தின் ஆதாரமாகவும் உள்ளது. எனவே இதனை ஒரு சூப்பர்ஃபுட் எனலாம் . மேலும், இவற்றை சாப்பிடுவதால் கலோரி எண்ணிக்கை அதிகரிக்காது. அதாவது எடை கூடும் என்ற கவலையும் இல்லை.
மேலும் படிக்க | LDL கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க இரவில் இந்த உணவுகளை சாப்பிடுங்க
3. பருப்பு வகைகள்
பருப்பு வகைகளும் வைட்டமின் பி12 நிறைந்தது. வைட்டமின் பி12 குறைபாட்டை இதன் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளலாம். மேலும், இதில் நார்ச்சத்து, புரதம், கால்சியம் உள்ளிட்ட தாதுக்கள் நிறைந்துள்ளன. சைவ உணவு உண்பவர்களுக்கு இதைவிட சிறந்த, மலிவு விலையில் உணவு கிடைக்காது.
4. காளான்
காளான்கள் வைட்டமின் பி12 ஊட்டசத்திற்கான சிறந்த சைவ உணவாகும். இந்தியாவில் எளிதில் கிடைக்கும் பட்டன் காளான் போன்ற அதன் வகைகள் அனைத்தும் வைட்டமின் பி12 நிறைந்தவை.
5. பழச்சாறு
தினமும் 1 கிளாஸ் பீட்ரூட் சாற்றுடன் மாதுளை, ஆரஞ்சு மற்றும் சாத்துக்குடி ஜூஸ் உட்கொள்வது உங்கள் உடலில் உள்ள பி12 குறைபாட்டை பூர்த்தி செய்ய உதவுகிறது. வைட்டமின் பி 12 உடன், இந்த பொருட்களில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது. கோடையில் லஸ்ஸி அல்லது மோர் அருந்துவதன் மூலமும் இந்த வைட்டமின் குறைபாட்டைப் போக்கலாம்.
6. வலுவூட்டப்பட்ட தானியங்கள்
நீங்கள் சைவ உணவு உண்பவராக இருந்தால், வைட்டமின் பி12 செறிவூட்டப்பட்ட தானியங்கள் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். காலை உணவில் இத்தகைய தானியங்களை உட்கொள்வது பி12 குறைபாட்டை ஈடுசெய்யும். ஆன்லைன் தளங்கள் அல்லது பல்பொருள் அங்காடிகளில் இந்த தானியங்களை எளிதாகக் காணலாம்.
7. பி12 சப்ளிமெண்ட்ஸ்
இருப்பினும், உடலில் அதிகப்படியான வைட்டமின் பி 12 குறைபாடு இருந்தால், உணவில் இருந்து போதுமான பி 12 கிடைக்காத நிலையில் இருந்தால், வைட்டமின் பி12 சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளலாம். எனினும், இவற்றை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | 30 நாளில் கொழுப்பு கரையும்... உங்களை ஏமாற்றாத... குறைந்த கலோரி கொண்ட டயட் பிளான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ