ஃபேட்டி லிவர் நோய் அறிகுறி: மாறிவரும் வாழ்க்கை முறையில் ஃபேட்டி லிவர் அதாவது கல்லீரலில் கொழுப்பு சேரும் பிரச்சனை சகஜமாகி வருகிறது. எனினும், இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.
இதன் அறிகுறிகளை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்கவில்லை என்றால், பின்னர் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்தியாவில் 9 முதல் 32 சதவிகிதம் பேருக்கு நான் ஆல்கஹால் ஃபேட்டி லிவர் நோய் இருக்கலாம் என்று பல அறிக்கைகள் கூறுகின்றன.
அதிகமாக உணரப்படாத இந்த நோயின் சில எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன. இவை நோயின் ஆரம்பத்தில் பெரும்பாலும் தென்படுவதில்லை. கல்லீரலில் கொழுப்பு அதிகரிப்பதற்கான ஐந்து பெரிய காரணங்கள் என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இவற்றை பற்றி தெரிந்துகொண்டால், அதன் மூலம் இந்த அறிகுறிகளை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறலாம்.
எடை அதிகரிப்பது
ஃபேட்டி லிவர் நோய் என்பது கல்லீரலின் உயிரணுக்களில் அதிக கொழுப்பு சேரும் ஒரு நோயாகும். இந்நாட்களில் இந்த நோய் பொதுவானதாகிவிட்டது. இதில் கல்லீரல் சரியாக வேலை செய்ய முடியாமல் பல சமயங்களில் பிரச்சனைகள் வருகின்றன. சில நேரங்களில் உடல் எடை அதிகரிப்பதால், கல்லீரலில் உள்ள கொழுப்பு அதிகரிக்கலாம்.
களைப்பாக உணர்வது
அடிக்கடி மிகவும் சோர்வாக உணர்ந்தால், நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் இதுவும் ஃபேட்டி விவர் நோயின் அறிகுறியாகும். ஆகையால், அடிக்கடி உடல் சோர்வாக இருப்பது போல நீங்கள் உணர்ந்தால், உடனடியாக பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
மேலும் படிக்க | Weight Loss: ஓமம் இருந்தா போதும், ஓடிப்போகும் அதிக எடை, இப்படி சாப்பிட்டு பாருங்க
பலவீனமும் ஒரு அறிகுறியாகும்
நீங்கள் மிகவும் பலவீனமாக உணர்ந்தாலும், கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், பலவீனமான உணர்வும் ஃபேட்டி லிவரின் ஒரு அறிகுறியாகும். பல சமயங்களில் சில ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டால் உடலில் பலவீனம் இருப்பதாகத் தோன்றுகிறது. எனினும், அதையும் அலட்சியமாக எடுத்துக்கொள்ளாமல், உடனடியாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
அடிவயிற்றில் வலி
உங்கள் அடிவயிற்றின் மேல் வலது பகுதியில் அடிக்கடி வலி இருந்தால், அதை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் இதுவும் ஃபேட்டி லீவரின் அறிகுறியாக இருக்கலாம். அப்படி வலி இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் காட்டுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டன. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Diabetes: ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் அற்புத பானம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR