முதுமையில் தான் மூட்டு வலியை சந்திக்க வேண்டியிருக்கும் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் காரணமாக, சிறு வயதிலேயே எலும்புகளின் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்பட ஆரம்பிக்கிறது. மேலும் அவர்கள் மூட்டு வலி பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இயல்பு வாழ்க்கையை மோசமாக பாதிக்கும் பிரச்சனைகள்
பலவீனமான எலும்புகள் நமது இயல்பு வாழ்க்கையை மோசமாக பாதிக்கும். எலும்புகள் பலவீனம் அடைந்தால் கை, கால்களில் வலி, மூட்டு வலி, முழங்கால் வலி, கீல்வாதம், ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) போன்ற பிரச்சனைகள் உண்டாகும் அபாயம் அதிகரிக்கும். ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்பு மெலிதல் நோய். இது தாக்கினால் எலும்புகள் மிகவும் பலவீனமடைவதோடு, எலும்புகள் எளிதில் முறியும் அபாயம் அதிகரிக்கும்.
எலும்புகளுக்கு நன்மை பயக்கும் உணவுகள்
எலும்புகளை வலுவாக வைத்திருக்க (Bone Health) கால்சியம் சத்து மிகவும் முக்கியமானது. கால்சியம் நிறைந்த பால் பொருட்கள் எலும்புகளை வலுப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பால், தயிர் மற்றும் சீஸ் போன்றவை உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். மேலும், முட்டைகளை உட்கொள்வதன் மூலம் உங்கள் பலவீனமான எலும்புகளை வலுப்படுத்தலாம். சிறுதானியங்களி, ராகி கால்சியத்தின் சிறந்த மூலமாகும்.
மூட்டு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்க உதவும் உணவுகள்
பச்சை இலைக் காய்கறிகளில் உள்ள அனைத்து சத்துக்களும் மூட்டு வலி பிரச்சனையை பெருமளவு குறைக்கும். கால்சியம் நிறைந்துள்ள கீரை, ப்ரோக்கோலி ஆகியவை எலும்பு ஆரோக்கியத்தை சிறந்த அளவில் மேம்படுத்தும். மூட்டு வலி பிரச்சனையில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள விரும்பினால், உலர் பழங்களை உங்கள் தினசரி உணவுத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறந்த பலன்களை அடைய, இந்த சூப்பர் உணவுகளை சரியான அளவு மற்றும் சரியான முறையில் உட்கொள்வது மிகவும் முக்கியம்.
எலும்பு ஆரோக்கியத்திற்கு வரமாக இருக்கும் சில உணவுகள்
ஆரோக்கிய கொழுப்புகள் மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த விதைகள் உங்கள் எலும்பு ஆரோக்கியத்திற்கு ஒரு வரமாக இருக்கும். நீங்கள் அசைவ உணவு உண்பவராக இருந்தால், உங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தை வலுப்படுத்த மீன்களை உட்கொள்ளலாம். ஆரஞ்சு எலும்புகளுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. காளான்களை தொடர்ந்து சாப்பிடுபவர்களின் எலும்புகள் வலுவடையும். பாதாம் பருப்பு, வாதுமை பருப்பு உள்ளிட்ட நட்ஸ் வகைகளில், ஆரோக்கிய கொழுப்பான ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மேலும் இவற்றில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், உடல் வலி மற்றும் மூட்டுவலி தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வை அளிக்கும்.
பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | ஓட்ஸை நைட் ஊறவைத்து... காலையில் இப்படி சாப்பிடுங்க - தொப்பை பட்டுனு கரையும்!
மேலும் படிக்க | ஆண்களின் அழகை கெடுக்கும் குடல் அசுத்தம்... காரணமும் தீர்வும் முழு விவரம்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ