60 வயதுக்காரரும் உடல் எடையை வேகமாக குறைக்கலாம்! இந்த ‘ஸ்பெஷல்’ வழி இருக்கு

Weight Loss Tips For Senior Citizens: 30 கிலோ எடையை குறைப்பது சுலபமானது தான்! இது ஒரு நடிகரின் நிதர்சனமான அனுபவம் சொல்லும் ஒல்லியாகும் பயணத்தின் கதை

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 5, 2023, 01:54 PM IST
  • 60 வயதுக்கு பிறகு உடல் எடையை குறைப்பு
  • உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்?
  • 30 கிலோ எடை குறைப்பது சுலபம் தான்
60 வயதுக்காரரும் உடல் எடையை வேகமாக குறைக்கலாம்! இந்த ‘ஸ்பெஷல்’ வழி இருக்கு title=

உடல் எடை குறைப்பது என்பது அனைவருக்கும் சவாலான விஷயமாக இருக்கிறது. குண்டாக இருந்தால், உருவக்கேலி செய்யப்படுவது வருத்தப்பட வைக்கும் என்பதைவிட, ஆரோக்கிய சீர்கேடு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஆனால், வயதானவர்கள், சீனியர் சிட்டிசன்களின் உடல் எடை அதிகமாக இருந்தால், மருத்துவர்கள் அவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு மற்றும் நடைபயிற்சி மூலம் உடல் எடையை குறைக்க அறிவுறுத்துகின்றனர். ஆனால், இது பலருக்கு சாத்தியமாவதில்லை.

ஆனால், பிரபல பாலிவுட் நடிகரும், 63 வயதான போமன் இரானி, சுமார் 30 கிலோ எடையை குறைத்துள்ளார். 60 வயதிற்கு பிறகு உடல் எடையை குறைக்க அவர் என்ன வழியை பின்பற்றினார் என்பது தற்போது அனைவரும் அறிந்துக் கொள்ள விருப்பப்படும் செய்தியாக மாறி, இணையதளங்களில் வைரலாகிறது.  
 
பாலிவுட் நடிகர் போமன் இரானி, பல வெற்றி பெற்ற திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் 3-இடியட்ஸ், மைன் ஹூன் நா, வீர்-ஜாரா, கோஸ்லா கா கோஸ்லா போன்ற பல பிரபல திரைப்படங்களில் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி, 'மகாத்மா vs காந்தி' படத்தில் தேசத் தந்தையாக நடித்ததன் அனுபவங்களை அவர் பகிர்ந்துள்ளார். இந்தப் படத்தில் நடிப்பதற்காக சுமார் 30 கிலோ எடையை குறைத்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

இன்ஸ்டாகிராம் பதிவில் போமன் இரானி என்ன சொன்னார்?
சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் மகாத்மா காந்தி கதாபாத்திரத்தில் நடித்தது தொடர்பான சில பதிவுகளை நடிகர் போமன் இரானி பகிர்ந்துள்ளார். காந்தி கதாபாத்திரத்திற்காக அவர் உடல் ரீதியாக நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

“ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு நாளும் காந்திஜியின் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும். ஃபிரோஸ் கானின் ‘Mahatma vs Gandhi’ படத்தில் மகாத்மா காந்தி கேரக்டரில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது, அது என்னுடைய அதிர்ஷ்டம். இந்த கேரக்டரை நன்றாக நடிக்க 30 கிலோ எடை குறைக்க வேண்டியிருந்தது, ஆனால் என் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

மேலும் படிக்க | Weight Loss: என்ன பண்ணாலும் எடை குறையலையா? இதை சாப்பிடுங்க போதும்

போமன் இரானியின் வயது 63 என்று சொல்லலாம். இந்த வயதில் 30 கிலோ எடையை குறைப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. நீங்களும் இந்த வயதில் உடல் எடையை குறைக்க விரும்பினால், சில முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
 
60 வயதுக்கு பிறகு உடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும்?
தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்
60 வயதிற்குப் பிறகு தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால், தசை வளர்ச்சியை துரிதப்படுத்தலாம். இந்த வயதில் உடற்பயிற்சி செய்தால் எலும்புகள் உடைந்து விடும் என்று கவலைப்பட வேண்டாம். மாறாக, இந்த வயதிலும் எந்த கவலையும் இல்லாமல் உடற்பயிற்சி செய்யலாம். இது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. இது எலும்பு வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவும்.

உடல் செயல்பாடுகளை அதிகரிக்கலாம் 
60 வயதிற்குப் பிறகு உடல் எடையை குறைக்க, உங்களுக்கு அனைத்து வகையான உடல் செயல்பாடுகளும் தேவை. 60 வயதிற்குப் பிறகு உங்கள் உடலை சுறுசுறுப்பாக வைத்திருந்தால், அது உங்கள் மன ஆரோக்கியத்தில் சாதகமான விளைவைக் கொண்டிருக்கிறது. இதற்காக, தினமும் சில நிமிடங்கள் நடக்க வேண்டும், நீச்சல் கூட உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

மேலும் படிக்க | உச்சி முதல் பாதம் வரை: ஆளி விதைகளில் அற்புத நன்மைகள்

உணவில் கவனம் தேவை
எடை இழப்புக்கு சமச்சீர் உணவு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், தங்கள் உணவில் புரதம் மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்களை சேர்க்க வேண்டும்.  சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.
 
நேர்மறை சிந்தனை
நேர்மறையாக சிந்தனைகள் அவசியமாக இருக்க வேண்டும், அது மன ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவைக் கொடுக்கும். உடல் எடையை குறைக்க, நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியம். குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் எப்போதும் நேர்மறை சிந்தனையுடன் இருக்க வேண்டும்.

60 வயதிற்குப் பிறகு, உடலில் பல வகையான பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பதால், உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாத்துக் கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம். உங்களுக்கு ஏதேனும் கடுமையான பிரச்சனை இருந்தால், கண்டிப்பாக உங்கள் உணவில் மாற்றங்களைச் செய்ய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இரவு உணவிற்குப் பின் செய்யும் இந்தத் தவறுகளால் உடல் எடை அதிகரிக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News