அடிவயிறு தொப்பை குறையணுமா? அப்போ இந்த காயை இப்படி சாப்பிடுங்கள்

Weight Loss: பரங்கிக்காயில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அத்தகைய சூழ்நிலையில், இதை சாப்பிடுவதால் உடல் எடையை குறைப்பது எளிது. எனவே பரங்கிக்காயின் உதவியுடன் உடல் எடையை எப்படி குறைக்கலாம் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 13, 2023, 10:18 PM IST
  • உடல் எடையை குறைக்க பரங்கிக்காயை இப்படி சாப்பிடுங்கள்.
  • இது கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
  • அயர்ச்சி, பித்தம் நீக்கும், கபத்தை வெளியேற்றும். உடல் பருமனைக் குறைக்கும்.
அடிவயிறு தொப்பை குறையணுமா? அப்போ இந்த காயை இப்படி சாப்பிடுங்கள் title=

உடல் எடையைக் குறைக்கும் பரங்கிக்காய்: பரங்கிக்காயின் பெயரைக் கேட்டாலே மக்கள் முகம் சுளிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஏனெனில் பெரும்பாலான மக்கள் இந்த காயை அவ்வளவு விரும்புவதில்லை. ஆனால் பரங்கிக்காயில் பல சத்துக்கள் நிறைந்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், பரங்கிக்காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் டி, ஃபோலேட், நியாசின், பான்டோதெனிக் அமிலம், தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவை காணப்படுகின்றன. இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. மறுபுறம், உங்கள் எடையைக் குறைக்க நீங்கள் விரும்பினால், கட்டாயம் பரங்கிக்காயை உட்கொள்ளலாம். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். அத்தகைய சூழ்நிலையில், உடல் எடையை குறைப்பது மிகவும் எளிதாகும். எனவே பரங்கிக்காயின் உதவியுடன் உடல் எடையை எப்படி குறைக்கலாம் என்பதை இப்போது நாம் தெரிந்துக்கொள்வோம்.

உடல் எடையை குறைக்க பரங்கிக்காயை இப்படி சாப்பிடுங்கள்

பரங்கிக்காய் சாறு
உடல் எடையை குறைக்க பரங்கிக்காய் சாறு அருந்தலாம். இதற்கு பரங்கிக்காயை முதலில் உரித்து சிறு துண்டுகளாக நறுக்கவும். இப்போது மிக்ஸியில் போட்டு அரைக்கவும். இப்போது அதை வடிகட்டி ஒரு கிலாஸில் போடவும், பின்னர் அதில் ஒரு சிட்டிகை கருப்பு மிளகு மற்றும் உப்பு சேர்த்து குடிக்கவும். தினமும் இரவில் பரங்கிக்காய் சாறு சாப்பிட்டு வந்தால், உடல் எடையை சுலபமாக குறைக்க முடிவும்.

மேலும் படிக்க | மூளை - உடலை பலவீனமாக்கும் விட்டமின் B12 குறைபாடு... தவிர்க்க சாப்பிட வேண்டியவை!

பரங்கிக்காய் சூப்
உடல் எடையை குறைக்க பரங்கிக்காய் சூப் குடிக்கலாம். இதைச் செய்ய, முதலில் பரங்கிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கவும். இப்போது பிரஷர் குக்கரில் வைத்து விசில் விடவும். இப்போது அதை ஒரு பிளெண்டர் உதவியுடன் கலக்கவும். இப்போது ஒரு கடாயில் சிறிது நெய்யை சூடாக்கவும். மேலும் அதில் சீரகம் மற்றும் கடுகு தாளிக்கவும். இப்போது அதனுடன் உப்பு சேர்த்து சாப்பிடவும்.

பல்லாயிரம் நன்மைகள் தரும் பரங்கிக்காய்
* பரங்கிக்காயில் வைட்டமின் ஏ அதிகளவில் காணப்படுகிறது, இது கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
* பரங்கிச் சாறு ரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பைப் போக்கக்கூடியது. இதனால் மாரடைப்பு உட்பட பல இதய நோய்கள் தடுக்கப்படுகிறது. 
* பரங்கிச் சாற்றோடு சிறிது தேன் கலந்து சாப்பிடுவதால் வெப்பம் தணிந்து, உடலுக்குக் குளிர்ச்சி தரும்.
* பரங்கிக்காய் உடலில் உள்ள இரும்புச்சத்து குறைபாட்டை போக்கி ரத்த சோகையை குணப்படுத்துகிறது .
* பரங்கிக்காய் சாறு 30 மில்லியளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வர வலிப்பு நோயின் தீவிரம் குறைந்துவிடும்.
* பரங்கிச்சாற்றைக் கொண்டு வாய்கொப்பளித்து வந்தால் பல்லின் வேரை பலப்படுத்தி பல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும்.
* மூல நோய், எரிச்சல், தாகம், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றிற்கு பரங்கிக்காய் அருமருந்து.
* பரங்கிக்காய் உடம்புக்கு வலிமையும், சக்தியும் அளிக்க வல்லது. அயர்ச்சி, பித்தம் நீக்கும், கபத்தை வெளியேற்றும். உடல் பருமனைக் குறைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.).

மேலும் படிக்க | எடை குறைய இப்படி செஞ்சு பாருங்க: ஜப்பானியர்களின் வெயிட் லாஸ் ரகசியம் இதுதான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News