தலைமுடியில் கடுகு எண்ணெயை பயன்படுத்துபவர்களுக்கு இந்த செய்தி பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால், இந்த எண்ணெயை தலைமுடியில் பூசிக்கொள்பவர்கள் பலர் உள்ளனர், ஆனால் அவர்களுக்கு சரியான வழி தெரியவில்லை. இந்த எண்ணெயை எப்படி தடவ வேண்டும், இந்த எண்ணெயைத் தடவிய பின் ஷாம்பு செய்யலாமா வேண்டாமா என்பதைப் போல பல விவரங்கள் உள்ளன. கடுகு எண்ணெயை தவறான முறையில் தடவுவது உங்கள் தலைமுடிக்கு நன்மைக்கு பதிலாக தீங்கு விளைவிக்கும், எனவே அதைச் செய்வதற்கான சரியான வழி என்ன என்பதை அறிந்து கொள்வோம்.
முடி வளர்ச்சிக்கு கடுகு எண்ணெய்
கடுகு எண்ணெயில் இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம், செலினியம் மற்றும் கால்சியம் உள்ளது. இதில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இதனுடன் கடுகு எண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் நிறைந்துள்ளன. இந்த எண்ணெயை முடிக்கு தடவினால் முடி வளர்ச்சி ஏற்படும்.
மேலும் படிக்க | Vitamin D பற்றாக்குறை கொரோனா நோயாளிகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
கடுகு எண்ணெயை கூந்தலில் தடவும்போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்
* கடுகு எண்ணெயை சோதனை இல்லாமல் பயன்படுத்தக் கூடாது. கடுகு எண்ணெயில் கலப்படம் தற்காலத்தில் நடப்பதாக நம்பப்படுகிறது. எனவே, ஒரிஜினல் கடுகு எண்ணையை தெரிந்தெடுங்கக்கள்.
* இது தவிர, எண்ணெய் ஸ்கால்ப் செய்வது மிகவும் முக்கியம்.
* பலர் கடுகு எண்ணெயை இரவு முழுவதும் தலைமுடியில் ஊற வைப்பார்கள், ஆனால் அவ்வாறு செய்யக்கூடாது.
* இதனுடன், கடுகு எண்ணெயை சூடாக்காமல் தலைமுடிக்கு தடவுவதை ஒருபோதும் தவறவிடாதீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR