Weight Lose Tips: டயட் இல்லாமல் உடல் எடையை குறைக்க எளிய வழிகள் இதோ!

Weight Lose Tips: உடல் எடையை குறைக்க பலரும் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், டயட் இல்லாமல் எப்படி உடல் எடையை குறைப்பது என்று பார்க்கலாம்.  

Written by - RK Spark | Last Updated : Apr 11, 2024, 09:14 AM IST
  • டயட் இல்லாமல் உடல் எடையை குறைக்கலாம்.
  • சரியான உணவுகளை பின்பற்ற வேண்டும்.
  • சத்தான உணவுகளை எடுத்து கொள்வது அவசியம்.
Weight Lose Tips: டயட் இல்லாமல் உடல் எடையை குறைக்க எளிய வழிகள் இதோ! title=

Weight Lose Tips: தற்போது பலரின் வாழ்க்கை முறை அதிகம் மாறி உள்ளது. இன்றைய வேகமான உலகில் பெரும்பாலோர் வீட்டில் சமைத்து சாப்பிட நேரம் இல்லாமல், கடை உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதன் காரணமாக உடலில் பல வித நோய்கள் ஏற்படுகிறது. சர்க்கரை நோய், கேன்சர் என நாம் எதிர்பார்க்க முடியாத நோய்கள் கூட வருகிறது. கடை உணவை தொடர்ந்து சாப்பிட்டால் வரும் பொதுவான பிரச்சனை உடல் எடை அதிகரிப்பு ஆகும்.  உடல் எடை அதிகரிப்பு மற்றும் தொப்பை பிரச்சனையால் பலரும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.  பலரும் உடல் எடையை குறைக்க ஜிம், டயட் என பலவற்றை முயற்சி செய்கின்றனர்.  ஆனால் அதில் ஒரு சிலருக்கு மட்டுமே பலன் கிடைக்கிறது.

மேலும் படிக்க | அபாயம்... இந்தியாவில் 30% இளைஞர்கள் காட்டும் அலட்சியம் - இந்த நோயால் கடும் பாதிப்பு வரலாம்!

பெரும்பாலும் இதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கிறது.  ஜிம்மிற்கு செல்லும் பலரும் முறையான விஷயங்களை பின்பற்றுவதில்லை.  சரியான உணவுமுறை, தூக்கம், டயட் இல்லாமல் ஜிமிற்கு செல்வது பிரோஜனம் இல்லாத ஒன்று ஆகும். பலரும் டயட் இருக்கிறேன் என்று தங்களது பிடித்த உணவுளை கூட கஷ்டப்பட்டு சாப்பிடாமல் இருந்து வருகின்றனர். ஆனாலும் அவர்களுக்கு உடல் எடை குறைவதில்லை. பாஸ்ட் புட் மற்றும் அதிக சர்க்கரை கொண்ட உணவுகளை சாப்பிட்டாலும் உடல் எடையை குறைப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.  

- தினமும் காலையில் சீரான உணவை சாப்பிட வேண்டும். காலையில் வெறும் டீ அல்லது காபி மட்டும் குடித்துவிட்டு டயட் இருக்க கூடாது. இரவில் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பதால், காலையில் பாதாம், வெண்ணெய் டோஸ்ட், முட்டைகள் போன்ற சத்தான உணவுகளை சாப்பிடுவது அவசியமான ஒன்று. காலை உணவை போலவே, மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதும் முக்கியம். சாப்பிடும் உணவில் புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்க உதவும்.

- நீங்கள் அசைவ உணவு பிரியராக இருந்தால் தினசரி உணவில் சிக்கன், முட்டை மற்றும் மீன் போன்ற உயர் புரத உணவு பொருட்களைச் சேர்க்க வேண்டும். அதே போல அதிக காய்கறிகளை சாப்பிடுவது நல்லது.  குறிப்பாக மதிய உணவு மற்றும் இரவு உணவின் போது அதிகம் சாப்பிட முயற்சி செய்யுங்கள்.  மதிய உணவு மற்றும் இரவு உணவில் 1 அல்லது அதற்கு மேற்பட்ட காய்கறிகளைச் சேர்ப்பது நல்லது. உணவை தவிர உடல் எடையை குறைக்க உங்கள் மன ஆரோக்கியமும் உங்கள் மனநிலையும் மிகவும் முக்கியம். 

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் படிக்க | அனைத்து பிரச்சனைகளுக்கும் அருமருந்து! இஞ்சியில் இத்தனை நன்மைகள் இருக்கா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News