குச்சிக் கிழங்கை இப்படி சாப்பிட்டு பாருங்க! ஒல்லிக் குச்சி உடம்பு கேரண்டி

Weight Loss With Cassava: மரவள்ளிக் கிழங்கில் இருக்கும் நார்ச்சத்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், குடலில் தேங்கியிருக்கும் கழிவுகளையும் வெளியேற்ற உதவுகிறது. உடல் எடையை குறைக்க மரவள்ளிக் கிழங்கு செய்யும் மாயம் இது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 17, 2022, 02:59 PM IST
  • உடல் எடையை குறைக்க மரவள்ளிக் கிழங்கு செய்யும் மாயம்
  • நார்ச்சத்து அதிகம் கொண்ட மரவள்ளிக்கிழங்கு
  • மலச்சிக்கலுக்கு மருந்து மரவள்ளி
குச்சிக் கிழங்கை இப்படி சாப்பிட்டு பாருங்க! ஒல்லிக் குச்சி உடம்பு கேரண்டி title=

கீரைகளைப்போலவே கிழங்கு வகைகளிலும்  வைட்டமின்களும், தாது பொருட்களும் நிறைந்து இருக்கின்றன. மரவள்ளிக் கிழங்கில் நம் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கின்றன. மரவள்ளி கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் மாவில் உயிரியல் மற்றும் இரசாயன கட்டமைப்பு பண்புகள் உள்ளதால், அதை எளிதாக திரவ குளுக்கோஸ் மற்றும் டெக்ஸ்ட்ரோஸ் ஆக மாற்ற முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு ஆகும். திரவ குளுக்கோஸ் மற்றும் டெக்ஸ்ட்ரோஸ் பரவலாக உணவு மற்றும் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

உணவு மற்றும் மருந்து தயாரிக்கும் பல தொழிற்சாலைகளில் தற்போது மரவள்ளிக் கிழங்கு மாவைப் பயன் படுத்தி திரவ குளுக்கோஸ் மற்றும் டெக்ஸ்ட்ரோஸ் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

செரிமான மண்டலம்
மரவள்ளிக் கிழங்கில் இருக்கும் நார்ச்சத்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், குடலில் தேங்கியிருக்கும் கழிவுகளையும் வெளியேற்ற உதவுகிறது. செரிமான மண்டலத்தை சீராக்கி, குடல் இயக்கத்தை சீர் செய்கிறது மரவள்ளிக் கிழங்கு.  

கண் பார்வை

மரவள்ளிக் கிழங்கில் வைட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. இதில் இருக்கும் போலேட்  மற்றும் வைட்டமின் சி ஆகியவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குகிறது. பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் ஆன்டிஆக்சிடன்டுகளும் மரவள்ளிக்கிழங்கில் இருக்கின்றன.

உடல்பருமன்

உடல் பருமன் என்பது தவிர்க்க முடியாத பிரச்சனையாக மாறியுள்ளது. இயற்கையாக உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், மரவள்ளி கிழங்கை அன்றாட உணவில் எடுத்துக்கொண்டால், அவற்றில் இருக்கும் நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றி உடல் எடையை குறைக்க உதவும். ஞாபக சக்தியை அதிகரிக்கும் தன்மைக் கொண்ட மரவள்ளிக் கிழங்கு, ஞாபக மறதியை குறைக்க வல்லது. 

மேலும் படிக்க | Oats For Weight Loss: உடல் எடையை குறைக்க ஓட்ஸை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா? 

ரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்க உதவும் மரவள்ளி கிழங்கு  அனீமியா உள்ளிட்ட நோய்களை குணப்படுகிறது. இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியின் காரணமாக அதிக ஆக்ஸிஜன் உடல் உறுப்புகளுக்கு செலுத்தப்படுகிறது. மரவள்ளிக் கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் ஜவ்வரிசி, பல ஆரோக்கிய பலன்களைக் கொண்டது. மரவள்ளி கிழங்குகளில் இருக்கும் வைட்டமின் கே மற்றும் கால்சியம் ஆகியவை எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 

சரும பிரச்னைகளுக்கு தீர்வு 

மரவள்ளிக் கிழங்கு தோல் மற்றும் பல்வேறு சரும பிரச்னைகளுக்கும் தீர்வாகிறது. மரவள்ளிக் கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, அதை அரைத்து முகத்தில் பூசி, அது நன்கு காய்ந்ததும், முகத்தைக் கழுவினால் சருமப் பிரச்சனைகள் தீரும். முகத்தில் உள்ள அதிக எண்ணெய் பசையை நீக்கி, சருமத்தின் துளைகளை மூடும் மரவள்ளிக் கிழங்கு சருமத்திற்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது.  

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இள நரை பிரச்சனையா... உங்கள் டயட்டில் சேர்க்க வேண்டிய ‘முக்கிய’ உணவுகள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News