டெங்கு காய்ச்சல்: அறிகுறிகள், எளிமையான வீட்டு வைத்தியங்கள் இதோ

Symptoms and Home Remedies of Dengue: நாட்டின் பல இடங்களில் டெங்குவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகின்றது. டெங்கு ஏடிஸ் வகை (Aedes Mosquitoes) கொசுக்களால் பரவுகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 17, 2024, 04:17 PM IST
  • டெங்குவின் ஆரம்ப அறிகுறிகள் என்ன?
  • இதிலிருந்து நிவாரணம் பெற நாம் செய்யக்கூடிய வீட்டு வைத்தியம் என்ன?
  • இவற்றை பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.
டெங்கு காய்ச்சல்: அறிகுறிகள், எளிமையான வீட்டு வைத்தியங்கள் இதோ title=

Symptoms and Home Remedies of Dengue: மழைக்காலத்தில் பல வித நோய்களும் தொற்றுகளும் வேகமாக பரவுகின்றன. இவற்றில் டெங்கு மிக முக்கியமான ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் இதன் பிடியில் பலர் சிக்குகிறார்கள். இந்த ஆண்டும் நாட்டின் பல இடங்களில் டெங்குவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகின்றது.

டெங்கு ஏடிஸ் வகை (Aedes Mosquitoes) கொசுக்களால் பரவுகிறது. இது ஜிகா மற்றும் சிக்குன்குனியா போன்ற வைரஸ்களையும் பரப்புகிறது. டெங்கு காய்ச்சல் மற்ற காய்ச்சல்களை போல ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு நேரடியாக பரவுவதில்லை. டெங்கு பாதிக்கப்பட்ட நோயாளியை கடித்த கொசு, ஆரோக்கியமான ஒருவரை கடித்தால், அந்த ஆரோக்கியமான நபரும் டெங்குவால் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. 

டெங்கு: ஆய்வுகள் தெரிவிக்கும் முக்கிய தகவல்கள்

- பெரும்பாலான மக்கள் டெங்கு காய்ச்சலில் இருந்து 3-7 நாட்களில் குணமடைந்து விடுகிறார்கள். 

- ஒருவருக்கு டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் இருந்தால், அது தீவிரமடைவதற்கான வாய்ப்பு 20ல் 1 ஆகும். 

- டெங்குவில் உடலில் பிளேட்லெட்டுகள் குறைய ஆரம்பித்து, ரத்தக்கசிவு ஏற்படும் அபாயம் ஏற்படுகின்றது.

டெங்குவின் ஆரம்ப அறிகுறிகள் என்ன? இதிலிருந்து நிவாரணம் பெற நாம் செய்யக்கூடிய வீட்டு வைத்தியம் என்ன? இவற்றை பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம். 

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்

- அதிகமான காய்ச்சல்

- கடுமையான கண் வலி

- மூட்டுகள் உட்பட உடலின் பல பாகங்களில் வலி

-குமட்டல் அல்லது வாந்தி

- சோர்வு அல்லது எரிச்சல் உணர்வு

- வயிற்று வலி

குறிப்பு: டெங்குவால் பாதிக்கப்பட்ட பலருக்கு எந்த வித அறிகுறிகளும் தெரிவதில்லை. அறிகுறிகள் தெரியும் நபர்களில் இந்த அறிகுறிகள், கொசு கடித்த 4 முதல் 10 நாட்களுக்குப் பிறகு தோன்றத் தொடங்கும். இந்த அறிகுறிகள் 3 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும். இதனால், அறிகுறிகள் தோன்றிய உடனேயே இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியமாகிறது.

டெங்குவில் இருந்து விரைவில் குணமடைவதற்கு உதவும் வீட்டு வைத்தியங்கள்

பப்பாளி இலை தேநீர்

பப்பாளி இலை டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை உட்கொள்வதால் டெங்கு விரைவில் குணமாக வாய்ப்புள்ளது. பப்பாளி இலை நீர் டெங்குவில் பிளேட்லெட்டுகள் குறையாமல் இருப்பதை உறுதிசெய்வதாக என்சிபிஐ அறிக்கை தெரிவிக்கின்றது. ஆகையால், டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள். பப்பாளி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி தினமும் ஒரு முறை குடிக்கலாம்.

மேலும் படிக்க | காபி பிரியர்களே உஷார்.... ஒரு நாளைக்கு எவ்வளவு காபி குடிக்கலாம் தெரியுமா?

துளசி இலை கஷாயம்

டெங்கு காய்ச்சல் மற்றும் உடல் வலியை குறைக்க, துளசி இலைகளை கஷாயம் செய்து குடிக்கலாம். இதன் மூலம் நல்ல நிவாரணம் கிடைக்கும். துளசி ஆயுர்வேதத்தில் நல்ல மருந்தாக கருதப்படுகின்றது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது.

உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம்

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். முடிந்தவரை அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக நீர்ச்சத்து உள்ள பழங்களை சாப்பிட வேண்டும். இது தவிர, இளநீர், எலுமிச்சை தண்ணீர் மற்றும் மோர் ஆகியவற்றையும் உட்கொள்ளலாம். 

ஆரோக்கியமான மற்றும் லேசான உணவை உட்கொள்ள வேண்டும்

- டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால், முடிந்தவரை அதிக அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.

- பருவகால மற்றும் பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்ப்பது நல்லது. 

- இதன் மூலம் உடலுக்கு போதுமான அளவு வைட்டமின் ஏ, துத்தநாகம், மெக்னீசியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகியவை கிடைக்கும்.

- இவை அனைத்தும் டெங்கு தொற்றை அகற்ற மிகவும் முக்கியமானவை.

- வெளி உணவுகளையும் அதிக எண்ணெய் கொண்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும். 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பெரிய பின்புறத்தை சீக்கிரமே சின்னதாக்கலாம்! ‘இதை’ செய்யுங்கள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News