ஆதார் தொடர்பான பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. ஆதார் தகவல்கள் ரூ.500-க்கு கிடைக்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்களும் எழுந்த வண்ணம் உள்ளது.ஆதார் எண் பாதுகாப்பானது என்று தொடர்ந்து மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
ஆதார் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு, இன்றைய விசாரணையின்போது முக்கியமான கருத்தை தெரிவித்து உள்ளது.
அதன்படி, ஆதார் விவகாரத்தில், தனிநபர் உரிமைகள் பாதிக்காத வகையிலும், அரசின் பொறுப்புகளும் பாதிக்காத வகையிலும் சமநிலையுடன் கையாளப்பட வேண்டும்' என்று கூறி உளளது.
ஆதார் தகவல்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கச்சொல் வது ஏன் என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியது. மேலும், குடிமக்களின் தோழனாகவே மத்திய அரசு இருக்க வேண்டும் என்றும் கூறியது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், குடிமக்களின் தனிப்பட்ட விவரங்களையும்,
ஒவ்வொரு பரிவர்த்தனையை யும் மத்திய அரசு கண்காணிப்பதை அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை என்று வாதிட்டார்.
அதைத்தொடர்ந்து வாதாடிய அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், தகவல் பாதுகாப்புச் சட்டத்தை வரையறை செய்வதற்காக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு வரும் மார்ச் மாதம் தனது ஆய்வு அறிக்கை அளித்துவிடும் என்று தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், தற்போது நாடு, பயங்கரவாத அச்சுறுத்தல், சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் போன்ற சவாலான செயல்களை எதிர்கொண்டுள்ளது.
இந்தச் சூழலில், தனிநபர் உரிமைகளும் அரசின் பொறுப்புகளும் ஒன்றையொன்று பாதிக்காத வகையில் சமநிலை யுடன் கையாள வேண்டிய அவசியம் உள்ளது என்றனர். அதைத்தொடர்ந்து வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வரும் 30ந்தேதி நடைபெறும் என்றும் அறிவித்தனர்.