விமானம் மூலம் ஆப்கானில் இருந்து தாயகம் திரும்பிய 129 இந்தியர்கள்

ஆப்கானிஸ்தானில் வசித்துவந்த 129 இந்தியர்கள் விமானம் மூலம் நேற்று தாயகம் திரும்பியுள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 16, 2021, 07:06 AM IST
விமானம் மூலம் ஆப்கானில் இருந்து தாயகம் திரும்பிய 129 இந்தியர்கள் title=

ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாகவே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்திருக்கிறது. ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 1000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது. தலிபான்களை சமாளிக்க முடியாமல் அரசு படைகள் திணறி வருகின்றன. 

தலிபான்கள் வசம் ஆப்கானின் (Afghanistan) பெரும்பகுதி சென்றுவிட்ட நிலையில், இதில் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது பெண்களே. தாலிபான்கள் மிக விரைவாக ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றினர். ந்தூஸ், தலுகான், நிம்ருஸ், செபர்கான், சாரஞ், சமங்கன், புல்-இ-கும்ரி, தக்கார் உட்பட 10 மாகாணங்களின் தலைநகரங்களை கைப்பற்றிய தலிபான் அமைப்பினர் அதனை தொடர்ந்து கந்தகாரை கைப்பற்றியது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலையும் (Kabul) தாலிபான்கள் கைப்பற்றினர். 

ALSO READ | Afghan Taliban Rule: ஆப்கானில் தாலிபான் ஆட்சி தொடங்கியது, அதிபர் நாட்டை விட்டு வெளியேறினார்

மேலும் ஆப்கானிஸ்தான், தாலிபான்களின் கட்டுக்குள் அதிகாரப்பூர்வமாக செல்வது உறுதியானது. சுமார், 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் மீண்டும் கைப்பற்றியுள்ளனர்.

இதற்கிடையில் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இனிவரும் நாள்களில் ஒருவேளை ஆப்கனில் நிலைமை மோசமடையும் பட்சத்தின் ஆப்கனில் வசிக்கும் மற்ற இந்தியர்களையும் இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு நிலைமையை கவனித்து வருகிறது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்காக, ஏர் இந்தியா நிறுவனம் சிறப்பு விமானத்தை இயக்கியது. இதன்படி ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சென்றது. அங்கிருந்து 129 பேர்களுடன் புறப்பட்ட அந்த விமானம் டெல்லி வந்து சேர்ந்தது.

 

ALSO READ | தாலிபான் வசமாகும் ஆப்கானிஸ்தான்; இந்தியர்களை தாயகம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News