இங்கிலாந்து நிறுவனமான, கேம்பிரிட்ஜ் அனாலிடிகா, அரசியல் ஆலோசனை வழங்கும் சேவையை மேற்கொள்ளும் நிறுவனம்.
இந்த நிறுவனம் உலக நாடுகளை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் தேர்தல் சமயத்தில், அவர்கள் வெற்றி பெற உதவும் வகையிலான தரவுகளை கொடுத்து உதவுவதோடு, மக்கள் இடையே, குறிப்பிட்ட அரசியல் கட்சி தொடர்பான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உதவி புரிந்து வந்தது.
கேம்பிரிட்ஜ் அனாலிடிகா (Cambridge Analytica) நிறுவனத்தின் அலுவலகங்கள் நியூயார்க், வாஷிங்டன், லண்டன், ஆகிய இடங்களில் உள்ளன.
தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுநர்கள், அரசியல் நிபுணர்கள் இவர்கள் நிறுவனத்தில் இதற்காக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன், இந்த சேவைக்கு உதவும் வகையில் பல விதமான தரவுகளை இவர்கள் பெறுகின்றனர்
அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் நடந்த தேர்தல்களின்போது, முதலில் இந்த நிறுவனம் ஐந்து கோடிக்கும் அதிகமான ‘பேஸ்புக்’ பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை திருடி விற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பின்னர் இது குறித்து நடத்திய விசாரணையில், சுமார் 9 கோடி பேஸ்புக் (Facebook) பயனர்களின் தகவல்களை திருடி இருப்பது தெரியவந்தது. இந்த தகவல் உண்மை என ‘பேஸ்புக்’ நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கும் ஒப்புக்கொண்டதை அடுத்து, இந்த விஷயம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
மேலும் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா’ நிறுவனத்தின் CEO அலெக்சாண்டர் நிக்சின் லண்டன் அலுவலகத்தில், காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்துடன் கூடிய ‘போஸ்டர்’ இருந்த புகைப்படம் வெளியானது இந்தியாவிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சர்வதேச அளவில் இந்த விவகாரம் கவனிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு குறித்து சிபிஐ (CBI) விசாரணை செய்யும் என மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் முன்னதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட விபரங்கள் மற்றும் தரவுகளை சட்டவிரோதமாக திருடியதாக, கூறி கேம்பிரிட்ஜ் அனாலிடிகா மீது தற்போது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
ALSO READ | இந்து கோவில் இடிக்கப்பட்ட போது பாகிஸ்தான் மவுனமாக வேடிக்க பார்த்தது: இந்தியா
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR