புது டெல்லி: கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுநோயை பரவுவதை தடுக்க நாடு முழுவதும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் இதுவரை 30 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் காரணமாக டெல்லி அரசு ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. டெல்லியில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளையும் மார்ச் 31 வரை மூட டெல்லி கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியா (Manish Sisodia) முடிவு செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் டெல்லி அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவும் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கொரோனா வைரஸ் தாக்குதல்.. 12 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த எழுத்தாளர்!
டெல்லியின் ஆரம்பப் பள்ளிகள் மார்ச் 31 வரை மூடப்படும் என்று மனிஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் கூறினார். அதாவது, டெல்லியில் உள்ள ஐந்தாம் வகுப்பு வரையிலான குழந்தைகளின் அனைத்து பள்ளிகளும் மூடப்படும். டெல்லி அரசாங்கத்தின் இந்த உத்தரவு நாளை முதல் (மார்ச் 6 -வெள்ளிக்கிழமை) செயல்படும். அரசு, தனியார், அரசு உதவி பெரும் பள்ளிகள், என்.டி.எம்.சி என அனைத்து பள்ளிகளும் இதில் அடங்கும். கொரோனா வைரஸ் தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளோம் எனவும் அவர் கூறினார்.
As a precautionary measure to prevent the possibility of spread of COVID-19 amongst our children, Delhi Government has directed immediate closure of all primary schools (Govt/ aided/ private/MCD/NDMC) till 31/3/20
— Manish Sisodia (@msisodia) March 5, 2020
இது தவிர, கொரோனாவைத் (Coronavirus) தடுக்க டெல்லி அரசு மற்றொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது. தில்லி அரசு தங்கள் அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகையை தற்காலிகமாக தடை செய்துள்ளது.
மேலும் படிக்க: கொரோனா வைரஸ் எதிரொலி: இனி ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை!
இது தவிர, கொரோனாவைத் தடுக்க டெல்லி அரசு மற்றொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது. தில்லி அரசு தங்கள் அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகையை தற்காலிகமாக தடை செய்துள்ளது.