ஆசிய-பசிபிக் பிரிவில் இருந்து நிரந்தரமற்ற உறுப்பினராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு (UNSC) இந்தியா புதன்கிழமை (ஜூன் 17) இரவு இரண்டு ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.
நியூயார்க்கில் நடைபெற்ற இந்தத் தேர்தலில், பதிவான 192 வாக்குகளில் இந்தியா 184 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.
ஐ.நா.பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. 10 நாடுகள் நிரந்தரமல்லாத உறுப்பினர்களாக சுழற்சி முறையில் இடம்பெற்று வருகின்றன. 2020 - 21 ஆம் ஆண்டுக்கான நிரந்தரமில்லாத உறுப்பினர் தேர்தலில் ஆசிய பசிபிக் பிராந்தியத்திலிருந்து இந்தியா போட்டியிட்டது.
READ | பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதால் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தனிமை
1950-1951, 1967-1968, 1972-1973, 1977-1978, 1984-1985, 1991-1992 மற்றும் 2011-2012 ஆகிய ஆண்டுகளில் யுஎன்எஸ்சியின் நிரந்தர உறுப்பினராக இந்தியா ஏழு முறை முன்னதாக பணியாற்றியுள்ளது.
ஆசிய-பசிபிக் குழுமத்தின் (ஏபிஜி) ஒரே வேட்பாளர் என்பதால் இந்தியா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது. ஜனவரி 2021 முதல் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு இந்தியா யு.என்.எஸ்.சி.க்கு திரும்பியுள்ளது. யுஎன்எஸ்சியில் இந்தியா கடைசியாக 2011 முதல் 2012 வரை பணியாற்றியது.
இந்நிலையில் இந்தத் தேர்தலில், பதிவான 192 வாக்குகளில் இந்தியா 184 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. இதன் மூலம், ஐ.நா.பாதுகாப்பு சபையின் நிரந்தரமில்லாத உறுப்பினராக 8 வது முறையாக இந்தியா தேர்வாகியுள்ளது. 2021-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் 2 ஆண்டுகளுக்கு இந்தியா இப்பொறுப்பில் நீடிக்கும்.
இந்தியாவுடன், அயர்லாந்து, மெக்ஸிகோ மற்றும் நோர்வே ஆகிய நாடுகளும் புதன்கிழமை நடைபெற்ற யு.என்.எஸ்.சி தேர்தலில் வெற்றி பெற்றன.