8th Pay Commission News In Tamil: எட்டாவது ஊதியக்குழு அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு சார்ந்து அதிரடியான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுக்குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ளுவோம்.
இந்தியாவில் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் காலப்போக்கிற்கு ஏற்ப பணவீக்கத்தை நிவர்த்தி செய்ய நிறுவப்பட்ட பல்வேறு மத்திய ஊதிய குழுவின் பரிந்துரை மூலம் குறிப்பிடத்தக்க திருத்தங்களுக்கு உட்பட்டுள்ளது. எனவே எட்டாவது ஊதியக்குழு அமைக்கப்பட்டால் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு 20% முதல் 35% வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.
இது லெவல் ஒன்று ஊழியர்களின் சம்பளத்தை சுமார் 345,60 ஆகவும், லெவல் 18 ஊழியர்களின் சம்பளத்தை ரூ. 4.8 லட்சமாகவும் உயர்த்த வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.
ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மற்றொரு நல்ல செய்தியும் உள்ளது. எட்டாவது ஊதிய குழு அமலுக்கு வந்தவுடன், ஓய்வூதிய பலன்கள் அதிக லாபம் ஈட்டக்கூடியதாக இருக்கும்.
மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களுக்கு நீண்ட நாட்களாக எட்டாவது ஊதிய குழுவுக்கான அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள். அது குறித்த அப்டேட் எப்போது வரும் என்ற ஆவல் அனைவரிடமும் உள்ளது.
இந்தியாவில் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் காலப்போக்கில் பணவீக்கத்தை நிவர்த்தி செய்ய நிறுவப்பட்ட பல்வேறு மத்திய ஊதியக்குழுவின் பரிந்துரை மூலம் குறிப்பிடத்தக்க திருத்தங்களுக்கு உட்பட்டுள்ளது.
1946 ஆம் ஆண்டில் மத்திய அரசால் முதல் ஊதியக்குழு தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவில் நியாயமான இழப்பீடுகளை உறுதி செய்வதில் தொடர்ச்சியாக மதிப்பாய்வுகள் மிக முக்கியமான விதியாக உள்ளது.
பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் பொருளாதார கட்டமைப்பில் மாற்றங்கள் ஆகியவற்றின் காரணமாக 5வது ஊதிய குழு, 6வது ஊதிய குழு மற்றும் 7வது ஊதிய குழுக்கள் இந்தியாவில் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் சம்பள கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களை கொண்டு வந்தது.
தற்போது அடுத்த கட்டமாக, அதாவது எட்டாவது ஊதியக்குழு குறித்து பேச்சுக்கள் எழுந்துள்ளது. அதற்கான நடவடிக்கைகள் முழுவேச்சில் நடைபெற்று வருகிறது.
8வது ஊதியக்குழு எப்பொழுது நடைமுறைக்கு வரும்?
-- எட்டாவது ஊதியக்குழு என்பது 2026 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் என கணிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இது குறித்து அரசிடமிருந்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வரவில்லை. விரைவில் இதற்கான அறிவிப்புகள் வரக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-- எட்டாவது ஊதியக்குழு அமைக்கப்பட்டால் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு 20 முதல் 35% வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.
-- எட்டாவது ஊதிய குழு 10 ஆண்டு காலமுறையில் அமல்படுத்தினால் ஒரு கோடிக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பலன் அடைவார்கள்.
-- ஊதிய குழுவை அமல்படுத்த சுமார் ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்பதால், இப்போது இதற்கான அறிவிப்பு வந்தால்தான், 8 வது ஊதிய குழுவை 2026 ஆம் ஆண்டில் அமலுக்கு கொண்டுவர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
7வது ஊதியக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்ட முக்கிய மாற்றங்கள் இவைதான்?
-- ஏழாவது ஊதியக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு பிப்ரவரி 28, 2014.
-- ஏழாவது ஊதியக்குழு நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு ஜனவரி 1, 2016.
-- ஏழாவது ஊதியக்குழு குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ₹18,000
-- பிட்மென்ட் ஃபேக்டர் 2.57
-- குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் 7000 ரூபாயில் இருந்து 18000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
(பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ