ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒருவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை ரூ 3,800 கோடிக்கு மின்சார கட்டணம் வந்ததுள்ளது. இச்சம்பவத்தால் அவர் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார்
பிஆர். குஹா என்ற நபர் மின்கட்டணம் கட்டாததால், அவரது வீட்டில் இருந்து மின் இணைப்பை துண்டிக்கப்படுகிறது. மேலும் அவர் ரூ 3,800 கோடி கட்ட வேண்டும் என ஜார்க்கண்ட் மின்சார வாரியம் (JEB) தனது அறிக்கையில் கூறியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ANI-யிடம் பேசிய குஹா, "எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது, நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை, நாங்கள் 3 அறைகள் கொண்ட ஒரு வீடும், அதில் மூன்று மின்விசிறிகள், மூன்று டூப்லைட் மற்றும் ஒரு டி.வி. மட்டுமே உள்ளது. எப்படி எங்களுக்கு இவ்வளவு கட்டணம் வந்தது? என கேள்வி எழுப்பினார்.
இதைக்குறித்து குஹாவின் மகள் ரத்னா பிஸ்வாஸ் கூறுகையில், "என் அம்மா ஒரு சர்க்கரை நோயாளி மற்றும் என் அப்பாவிற்கு அழுத்தம் உள்ளது. இந்த சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஜார்க்கண்ட் மின்சார வாரியத்திற்கு எதிராக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.