புதுடெல்லி: சினிமா திரையரங்குகளில் திரைப்படம் தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் கட்டாயம் இசைக்க வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளுக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதிலும் சினிமா தியேட்டர்களில் படம் துவங்குவதற்கு முன் தேசியகீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும். தேசியகீதம் இசைக்கப்படும் போது திரையில் தேசிய கொடி காட்டப்பட வேண்டும். அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் மேலும் எந்த காரணத்திற்காகவும், தேசிய கீதத்தின் சுருக்க வடிவம் இசைக்கப்படக் கூடாது என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள சில சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வருகிறது. 1980-ம் ஆண்டு வரை அனைத்து சினிமா தியேட்டர்களிலும் பின்பற்றப்பட்ட இந்த முறையானது பின்னர் மறைந்து போனது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை கட்டாயம் நிறைவேற்றுவோம். இந்த உத்தரவை நிறைவேற்றுவது தொடர்பாக மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும் என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது மத்திய அரசு.