இனி மாடு மேய்ப்பவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு: BJP அமைச்சர்

வேட்பாளர் ஒருவர் பசு வளர்ப்பை பின்பற்றவில்லையெனில் தேர்தல் ஆணையம் அவருடைய வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக மத்திய பிரதேச சுற்றுச் சூழல் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 18, 2021, 08:52 PM IST
இனி மாடு மேய்ப்பவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு: BJP அமைச்சர் title=

வேட்பாளர் ஒருவர் பசு வளர்ப்பை பின்பற்றவில்லையெனில் தேர்தல் ஆணையம் அவருடைய வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக மத்திய பிரதேச சுற்றுச் சூழல் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசம்:  ஒருவர் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால் மாடு மேய்க்க வேண்டும். அதுவும் பசுமாடுகள் பராமரிப்பில் ஈடுபடுவதை கட்டாயமாக்க வேண்டும் என மத்திய பிரதேச சுற்றுச் சூழல் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் டங் வித்தியாசமான கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பி.டி.ஐ (PTI) செய்தி நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றினை அளித்தார். அந்த பேட்டியில்  ஒருவர் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால் அவர்கள் மாடு வளர்ப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது தனது தனிப்பட்ட கருத்து என்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சமூகத்தின் ஒரு பகுதி என்பதால் அவர்கள் "பசுக்களின் பாதுகாப்புக்காக கடினமாக உழைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Also Read | Live-in relationship சட்டவிரோதமானது என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

"வேட்பாளர் ஒருவர் பசு வளர்ப்பை பின்பற்றவில்லையெனில் தேர்தல் ஆணையம் அவருடைய வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும். எனவும் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு தான் கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தவிர சமூகத்தின் அனைத்து பிரிவினரும் "பசுக்களின் பாதுகாப்பிற்காக பங்களிக்க வேண்டும்.இப்போது கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்ட்த்தின் கீழ் விவசாயம் அல்லது விவசாய பொருட்களை வாங்கும் மற்றும் விற்பனை செய்யும் மக்களுக்கு மாடு வளர்ப்பும் கட்டாயமாக்க பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாடு வளர்ப்பில் அவர்களால் பங்களிக்க முடியாத காரணத்தினால் மாதம் ரூ25,000 சம்பளம் பெறும் ஊழியர்களிடமிருந்து பசுக்களுகென்று அவர்களின் மாத சம்பளத்தில் ரூ .500 வசூலிக்கப்பட வேண்டும் என்று மத்திய பிரதேச சுற்றுச் சூழல் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் டங் வித்தியாசமாக பேசியுள்ளார்.

Also Read | Live-in relationship சட்டவிரோதமானது என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News