இந்தியாவின் தடுப்பூசி போடும் வேகம் வியப்பளிக்கிறது: கமலா ஹாரிஸ்

அமெரிக்க அதிபர் பைடன் தலைமையில் இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவுகள் புதிய உயரங்களை தொடும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 24, 2021, 09:32 AM IST
இந்தியாவின் தடுப்பூசி போடும் வேகம் வியப்பளிக்கிறது: கமலா ஹாரிஸ்  title=

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்பாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸையும், ஆஸ்திரேலியா, ஜப்பான் நாட்டு பிரதமர்களையும், சந்தித்து பேசினார்.

கமலா ஹாரிஸ் உடனனான சந்திப்பின் போது, கொரோனா இரண்டாவது அலையின் துவக்கத்தில் இந்தியாவுக்கு உதவியதற்காக அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்ததுடன், இந்தியாவிற்கு வருகை தருமாறு, கமலா ஹாரிஸுக்கு அழைப்பு விடுத்தார். அமெரிக்க அதிபர் பைடன் தலைமையில் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவுகள் புதிய உயரங்களை தொடும் என்று பிரதமர் மோடி (PM Modi)குறிப்பிட்டார். 

அமெரிக்காவின் மிக முக்கிய பங்காளராக இந்தியா திகழ்கிறது என கமலா ஹாரிஸ் (Kamala Harris), திகழ்வதாக குறிப்பிட்டார். கொரோனா பெருந்தொற்றின் துவக்கத்தில் மற்ற நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கி இந்தியா பெரிய அளவில் உதவி புரிந்துள்ளதாக கமலா ஹாரிஸ் பாராட்டினார். இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி மீண்டும் தொடங்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்றுள்ள கமலா ஹாரிஸ், இந்தியாவில் தினசரி 1 கோடி என்ற அளவிற்கு செலுத்தப்படுவது ஆச்சரியத்தை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ | அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு..!!

இரு நாடுகளும் இணைந்து தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், விண்வெளி ஆராய்ச்சி, கல்வி மற்றும் கண்டுபிடிப்பு துறை ஆகியவற்றில் எவ்வாறு பங்களிப்பை அதிகரிப்பது என்பது தொடர்பாகவும் பிரதமர் மோடியும் கமலா ஹாரிஸும் ஆலோசனை செய்தனர். மோடியுடனான சந்திப்பின் போது, ​​பயங்கரவாதத்தில் பாகிஸ்தானின் பங்கை பற்றி குறிப்பிட்ட ஹாரிஸ், பயங்கரவாதக் குழுக்கள் பாகிஸ்தானில் செயல்பட்டு வருவதாகவும், அமெரிக்கா மற்றும் இந்தியாவின் பாதுகாப்பை பாதிக்காத வகையில் இஸ்லாமாபாத் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

கமலா ஹாரிஸை சந்தித்தப்பிறகு ஜப்பான் பிரதமர் யோஷிஹிட் சுகாவுடன் பிரதமர் மோடி சந்தித்து இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, வர்த்தகம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தினார்.

நான்கு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேதந்திர மோடி, இன்று குவாட் உச்சிமாநாட்டில் உரையாட உள்ள நிலையில், முன்னதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனை இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு சந்தித்து இருநாட்டு நல்லுறவு குறித்து விவாதித்தார். இருநாடுகளுக்கு இடையே பொருளாதாரத்தை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் இருநாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு குறித்தும் இருநாட்டு தலைவர்களும் பேசினர். வணிகம், பாதுகாப்பு, சுற்றுச்சூழலுக்கு கேடில்லாத ஆற்றல் உருவாக்கம் குறித்தும் ஸ்காட் மோரிசனிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு அமெரிக்க அதிபர் பைடனை பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் குவாட் உச்சிமாநாடு இந்திய நேரப்படி இன்றிரவு 11.30 மணிக்கு நடைபெற உள்ள குறிப்பிடத்தக்கதுது.

முன்னதாக, வாஷிங்டனில் குவால்காம் (Qualcomm) நிறுவனத்தின் தலைவர் கிரிஸ்டியானோ ஆர். ஆமனுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் அலுவலகம், இருவருக்கும் இடையே நடந்த ஆலோசனை பயனுள்ள வகையில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஏராளமான வாய்ப்புகள் குறித்து பிரதமர் எடுத்துரைத்தார். 5ஜி உட்பட டிஜிட்டல் இந்தியா திட்டங்களில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாக கிறிஸ்டியானோவும் தெரிவித்தார். 

ALSO READ:SCO Summit 2021: ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இன்னும் உதவ விரும்புகிறோம்: பிரதமர் மோடி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News