புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, NIA குழுவினர், ராஜ்நாத் சிங் காஷ்மீர் விரைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 70 வாகனங்களில் 2,500 CRPF வீரர்கள் பயணம் மேற்கொண்டனர். அந்த வாகன அணிவகுப்பு புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தின் அருகே சென்றது. அப்போது எதிரே பயங்கரவாதிக்கள் வெடிகுண்டு ஏந்திய காரினை கொண்டு வந்து CRPF வீரர்கள் பயணித்த கான்வாயில் புகுந்தது மோதியதும் அதில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறியுள்ளது. இந்த கோர விபத்தில் 39 வீரர்கள் பலியாகினர். இந்த சம்பவம் சரியாக நேற்று மாலை 3.15 மணியளவில் நடந்துள்ளது. தற்போது வரை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து, பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவைக் குழுவின் கூட்டத்தில் இன்று பிரதமர் மோடி பங்கேற்கிறார். காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதல் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காஷ்மீர் தாக்குதலையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து இன்று காலை 9.15 மணிக்கு பிரதமர் தலைமையில் பாதுகாப்புக்கான மத்தியஅமைச்சரவைக் குழுவின் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி சில முக்கிய முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது.
இதை தொடர்ந்து, NIA படை மற்றும் ராஜ்நாத்சிங், தமது பீகார் கூட்டத்தை ரத்து செய்து விட்டு ஸ்ரீநகர் வந்தடைந்தனர். காயம் அடைந்த வீரர்களை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரிப்பதுடன், உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கும் ராஜ்நாத்சிங் ஆறுதல் அளிக்க உள்ளார். முன்னதாக அவர் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் சிங்குடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். பாகிஸ்தான் மீது துல்லியத் தாக்குதல் நடத்தியதன் பின்னணியில் இயங்கிய அஜித் தோவல் ராணுவ உயரதிகாரிகளுடன் இந்த தாக்குதல் தொடர்பான விவரங்களைக் கேட்டு பெற்றுள்ளார்.