மான் வேட்டையாடிய வழக்கு: சல்மான் கான் ஜோத்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்!!

மான் வேட்டை வழக்கில் ராஜஸ்தான் மேல் முறையீட்டினை தொடர்ந்து, தற்போது சல்மான் கான் ஜோத்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

Last Updated : Jan 4, 2018, 05:26 PM IST
மான் வேட்டையாடிய வழக்கு: சல்மான் கான் ஜோத்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்!!  title=

மான் வேட்டை வழக்கில் ராஜஸ்தான் மேல் முறையீட்டினை தொடர்ந்து, தற்போது சல்மான் கான் ஜோத்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் 1998-ம் ஆண்டு இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் தனது படப்பிடிப்பில் இருந்தார். அப்போது அவர் தடை செய்யப்பட்டுள்ள அபூர்வ இன கருப்பு மான் வேட்டையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவருடன் படப்பிடிப்புக்கு சென்றிருந்த நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம், நடிகர் சயீப் அலி கான் உள்ளிட்டவர்களும் இந்த வழக்கில் சிக்கினர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இவ்வழக்கில் தீர்ப்பளித்த ராஜஸ்தான் ஐகோர்ட், சல்மான் கான் மான் வேட்டை ஆடியதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்தது.

அதை தொடர்ந்து, இவ்வழக்கில் சல்மான் கான் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, ராஜஸ்தான் அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தது.

ராஜஸ்தான் மேல் முறையீட்டினை தொடர்ந்து, தற்போது சல்மான் கான் ஜோத்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

Trending News