ராமேஸ்வரம் வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஆளுநர் மாளிகையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனைவரையும் சந்தித்தார்.
அப்போது பேசிய குடியரசுத் தலைவர் பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அனைத்தையும் இனி தமிழில் மொழி பெயர்த்து வழங்கும்படி கேட்டுக் கொண்டார்.
இதற்காக சட்டப் புத்தகங்களும் தமிழில் மொழி பெயர்க்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் உறுதியளித்துள்ளார். குடியரசுத் தலைவரின் இந்த அறிவிப்பால் வழக்கறிஞர்களும், மனுதாரர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.