திரிபுரா, நாகாலாந், மேகாலயா என 3 மாநிலங்களிலும் பாஜக கொடியை நாட்ட தயாராகிவிட்டது!
நேற்றைய தினம் வெளியான இம்மாநில தேர்தல் முடிவுகளில், திரிபுராவில் தனிபெரும்பான்மையுடன் வெற்றிப் பெற்றது. இதனால் அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி உறுதியானது.
நாகாலந்த் மற்றும் மேகாலயாவில் யார் ஆட்சியை பிடிப்பார் என குழப்பங்கள் நிலவி வந்த நிலையில் பாஜக கூட்டனியால் ஆன ஆட்சியே நடக்கவுள்ளது என்பதும் உறுதியானது. இதனால் 3 மாநிலங்களிலும் பாஜக கட்டுப்பாட்டில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இன்று, நாகாலாந்-ல் பாஜக கூட்டணி கட்சியான தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி ஆட்சியை அமைக்க அம்மாநில ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
60 தொகுதிகள் கொண்ட நாகாலாந்தில் ஆட்சியமைக்க குறைந்தபட்சம் 31 இடங்கள் வேண்டும், ஆனால் பாஜக மற்றும் அதன் கூட்டனி கட்சி தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி வசம் 29 இடங்களே இருந்தது. எனவே ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் உடன் இனைந்து கூட்டனி ஆட்சி அமைக்கிறது.
அதேப்போல், 59 தொகுதிகளை கொண்ட மேகாலயாவில், காங்கிரஸ் 21 இடங்களையும், தேசிய மக்கள் கட்சி 19 இடங்களையும் கைப்பற்றின. ஐக்கிய ஜனநாயக கட்சி 6 இடங்களிலும், இதர கட்சிகள் 11 இடங்களில் வெற்றி பெற்றன.
மேகாலயாவில் ஆட்சியமைக்க 31 இடங்கள் வேண்டிய நிலையில் எந்த கட்சியும் தனி பெரும்பான்மை அடயாத நிலையில் அங்கு தொங்கும் ஆட்சி நிலவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பா.ஜ.க. கோரிக்கையினை ஏற்று தேசிய மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிக்க ஐக்கிய ஜனநாயக கட்சி தலைவர் டான்குபர் ராய் முடிவு செய்தார். HSPDP கட்சியும், மேலும் ஒரு சுயேட்சை வேட்பாளரும் இந்தக் கூட்டணிக்கு ஆதரவு அளித்தனர்.
இதனால், மேகாலயாவிலும் தேசிய மக்கள் கட்சியின் கூட்டணியில் பாஜக ஆட்சியில் அமர்வது உறுதியானது.