மஞ்சள் பற்களை வெண்மையாக்க எளிய வீட்டு வைத்தியம்: பற்களின் மஞ்சள் நிறத்தை போக்க நாம் பல முயற்சிகளை செய்கிறோம். பல சமயங்களில் பல் துலக்கினாலும் மஞ்சள் நிறமாக தான் பற்கள் தோன்றும், படிப்படியாக இந்த மஞ்சள் நிறமானது பற்களை நிரந்தரமாகப் பிடித்துக் கொள்ளும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் பிறர் முன் சிரிப்பதைத் தவிர்ப்பது மட்டுமின்றி அதிகம் பேச கூட விரும்புவதில்லை. இருப்பினும், பற்களின் மஞ்சள் நிறத்தை அகற்ற பல வழிகள் உள்ளன. பற்களை பளபளப்பாக்கக்கூடிய பல வீட்டு வைத்தியங்கள் உள்ளன. பற்கள் வெண்மையாக இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள். பற்களை வெண்மையாக்குவது நமது ஆளுமையையும் மேம்படுத்துகிறது. நீண்ட நேரம் பற்களில் மஞ்சள் அடுக்கு குவிந்து கிடப்பது கேவிட்டி பிரச்சனைக்கு வழிவகுக்கும். பற்களில் உள்ள துவாரங்களுடன், நீங்கள் வாய் துர்நாற்றத்தையும் சந்திக்க வேண்டியிருக்கும். இந்நிலையில் மஞ்சள் பற்களை பளபளப்பான வெண்மையாக்குவது பற்றி பேசுகையில், அதிசயங்களைச் செய்யக்கூடிய இயற்கை முறை ஒன்று உள்ளது.
பற்களின் மஞ்சள் நிறத்தை நீக்கும் வேம்பு | Neem To Remove Yellowness of Teeth
பற்களின் மஞ்சள் நிறத்தை நீக்க சிறந்த வழி இயற்கை வேம்பு (Neem). இந்த இயற்கை மூலிகையை பல வழிகளில் பயன்படுத்தலாம். வேம்பு உங்கள் பற்களுக்கு அதிசயங்களைச் செய்யும், ஏனெனில் இது அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே வெண்மையான பளபளப்பான பற்களைப் பெற மஞ்சள் பற்களில் வேப்பைப் பயன்படுத்துவதற்கான சில வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன, அவற்றை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
மேலும் படிக்க | முடி ஒல்லியா எலிவால் மாதிரி இருக்கா? அப்போ உடனே இத பண்ணுங்க
வேப்பிலை:
கசப்பான ருசியுள்ள இலைகள் உங்கள் ஈறுகளில் இருந்து பிளேக் மற்றும் டார்ட்டரை அகற்றும், அதுமட்டுமின்றி இந்த வேப்பிலை வாய் துர்நாற்றை போக்கவும் உதவும். எனவே இந்த வேப்பிலையை (Neem Leaves) நீங்கள் பேஸ்ட் செய்தும் பல் துலக்கலாம்.
வேப்ப மரப்பட்டை:
ஆரோக்கியமான பற்களுக்கு வேப்ப மரப்பட்டையை மென்று சாப்பிடலாம். இது பல் நோய்களை எதிர்த்துப் போராடுவது மட்டுமல்லாமல், துவாரங்களைத் தடுக்கும், இது இன்று மிகவும் பொதுவான பல் பிரச்சனையாக உள்ளது. இந்த வேப்ப மரப்பட்டை பற்களை பளபளப்பாக மாற்றவும் உதவுகிறது.
வேப்பங்குச்சி:
பற்களின் ஆரோக்கியத்திற்காக இந்தியாவில் பயன்படுத்தப்படும் பழமையான முறைகளில் இதுவும் ஒன்றாகும். ஈறு நோய்கள் வராமல் இருக்கவும், பற்களை வெண்மையாக்கவும் வேப்பங்குச்சிகளை கொண்டு பற்களை சுத்தம் செய்யலாம். உங்கள் அருகிலுள்ள மருத்துவக் கடையில் வேப்பங்குச்சிகளை எளிதாகப் பெறலாம்.
வேப்பம் பொடி:
வேப்பம் பொடி பாரம்பரியமாக உலர்ந்த வேப்ப இலைகளை அரைத்து தயாரிக்கப்படுகிறது. பேஸ்ட் தயாரிக்க, ஒரு டீஸ்பூன் வேப்பம் பொடிடுடன் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் தண்ணீருடன் கலக்கவும். பளபளப்பான மற்றும் சுத்தமான பற்களைப் பெற இந்த வீட்டில் தயாரிக்கப்பட்ட பற்பசையைக் கொண்டு துலக்கவும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உடலில் பல அதிசயங்களை செய்யும் பெருஞ்சீரகம் மற்றும் வெந்தய தண்ணீர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ