Download Voter ID Easy Steps: நாட்டில் 18வது மக்களவைத் தேர்தல் துவங்கியுள்ளது. வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை வேண்டும். வாக்காளர் அடையாள அட்டையை எப்படி பதிவிறக்கம் செய்வது, வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை எப்படி சரிபார்ப்பது மற்றும் எஸ்எம்எஸ் மூலம் எவ்வாறு தெரிந்துக்கொள்வது போன்ற சில எளிய வழிமுறைகளை குறித்து அறிந்துக்கொள்ளுவோம்.
ஒரு குறுந்செய்தியை அனுப்புவதன் மூலம் வாக்காளர் பட்டியலில் உங்கள் வாக்காளர் அட்டை பெயரை சரிபார்க்கலாம். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயரைப் பார்க்க இணைய சேவை அவசியமும் இல்லை. எந்த இணையதளத்திற்கும் சென்று பார்க்க வேண்டியதும் இல்லை.
வீட்டிலோ அல்லது வெளியோ. எங்கிருந்தாலும் ஜஸ்ட் ஒரே ஒரு எஸ்எம்எஸ் அனுப்புவது மூலம் உங்கள் வாக்காளர் அடையாள அட்டை குறித்த விவரத்தை தெரிந்துக் கொள்ளலாம். இந்த முறை உங்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும். ஏனெனில் வாக்காளர் பட்டியல் குறித்த தகவல்களை எஸ்எம்எஸ் மெசேஜ் மூலம் பெறலாம் என தேர்தல் ஆணையமே தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. ஆன்லைன் போர்ட்டல்களிலும் ஆப்லைன் மூலமும் இந்தத் தகவலைப் பெறலாம்.
எஸ்எம்எஸ் மூலமாக வாக்காளர் பட்டியல் குறித்த தகவல்களைப் பெற விரும்பினால், 1950 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். அதாவது EPIC என டைப் செய்து வாக்காளர் எண்ணை எழுதி அனுப்ப வேண்டும். எடுத்துக்காட்டாக, உங்கள் EPIC எண் '87654321' எனில், ECI 87654321 என்ற எண்ணுக்கு நீங்கள் செய்தி அனுப்ப வேண்டும்.
மேலும் படிக்க - உங்களிடம் வோட்டர் ஐடி இல்லையா? அப்போ வாக்களிப்பது எப்படி? உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்
உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றால், இதன்மூலம் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மின் வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்ய, நீங்கள் வாக்காளர் சேவை போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும்.
அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்ற பிறகு, EPIC ஐப் பதிவிறக்குவதற்கான விருப்பம் அங்கே இருக்கும். EPIC எண்ணை நிரப்பிய பிறகு நீங்கள் அதை பதிவிறக்கம் செய்ய முடியும். வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்ய செல்லும் போது, OTP என்ற ஆப்ஷனும் கொடுக்கப்படும். நீங்கள் வாக்களிக்க அவற்றைப் பயன்படுத்தலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க - வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் வாக்களிக்க முடியும்! எப்படி தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ