உடல் எடை குறைய சியா விதைகள்: தற்போது சிறிது காலமாகவே, சியா விதைகளின் பயன்பாடு உடல்நலப் பிரியர்களிடையே அதிகளவு அதிகரித்துள்ளது. ஸில் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு பிறகு, இந்த சியா விதையின் பல மகத்தான நன்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. குறிப்பாக இந்த சியா விதைகள் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க பெரிய அளவில் உதவுகிறது. இந்நிலையில் இன்று நாம் இந்த கட்டுரையில் உடல் எடையை குறைக்க சியா விதைகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து தெரிந்துக்கொள்வோம்.
சியா விதையின் நன்மைகள் என்ன?
சியா விதைகளில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது, இதன் காரணமாக இந்த விதையை தினமும் உட்கொண்டு வந்தால், உங்கள் வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருக்கும், அதுமட்டுமின்றி பசியை கட்டுப்படுத்த இந்த விதை உதவும். இந்த சியா விதையை உட்கொள்வதால் உங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அதனுடன் சியா விதைகள் செரிமான செயல்முறையை மெதுவாக்க உதவுகிறது, மேலும் இந்த விதைகள் இரத்தத்தில் வெளியிடப்படும் சர்க்கரையின் அளவையும் குறைக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி இந்த சிறிய சைஸ் சியா விதைகள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், அடிக்கடி ஏற்படும் பசியையும் கட்டுப்படுத்த உதவுகிறது.
மேலும் படிக்க | எகிறும் உடல் எடையை பட்டுனு குறைக்க உதவும் பச்சை உணவுகள்: கண்டிப்பா சாப்பிடுங்க|
உடல் எடையை குறைக்க சியா விதைகளை எவ்வாறு பயன்படுத்துவது?
ஊடக எடை குறைக்க முயற்சி செய்பவர்கள் சியா விதையை இங்கே கொடுக்கப்பட்டுள்ள முறையை பயன்படுத்தலாம். இதற்கு முதலில் இரண்டு ஸ்பூன் சியா விதைகளை இரவஉ முழுவதும் பால் அல்லது தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் காலையில் எழுந்தவுடன் இந்த பானத்தை வெறும் வயிற்றில் குடிக்கவும். இதுமட்டுமின்றி, நீங்கள் விரும்பினால், சியா விதைகளை சாலட் அல்லது ஃப்ரூட் கஸ்டர் வடிவிலும் அருந்தலாம். அதேபோல் சியா விதையை புட்டாக தயாரித்தும் உட்கொள்ளலாம். சியா விதையை இந்த முறையில் உட்கொண்டு வந்தால் உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். வேண்டுமானால் சியா விதைகளை வறுத்த பின் அரைத்து அதன் பொடியை தயார் செய்து வைத்தும் அடிக்கடி சாப்பிடலாம்.
சியா விதைகள் எடையை எவ்வாறு கட்டுப்படுத்த உதவுகிறது?
இப்போது கேள்வி என்னவென்றால் சியா விதை எப்படி உடல் எடை குறைக்க உதவுகிறது என்பது தான். பொதுவாக மருத்துவ ரீதியாக, சியா விதையில் ஏராளமான நார்ச்சத்து நிறைந்துள்ளன, இது உங்களின் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்க உதவும், இதனால் நீண்ட நேரம் பசி ஏற்படாமல் இருக்கும். இது ஒரு தாவர அடிப்படையிலான புரத மூலமாகும், எனவே இந்த விதை உங்கள் தசைகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது, அதனுடன் கொழுப்பை வேகமாக எரிக்கவும் உதவுகிறது. சியா விதைகள் உங்கள் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துவதோடு குடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இதனால் உடலில் கொழுப்பு சேராமல் இருக்கும். எனவே உடல் எடை குறைக்க நீங்களும் பாடுபடுகிறீர்கள் என்றால் இந்த முதல் தினமும் 10 முதல் 15 கிராம் சியா விதையை உட்கொள்ள தொடங்குங்கள்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஜிம் வேண்டாம், டயட் வேண்டாம்: சட்டுனு எடை குறைக்க வீட்டிலேயே இப்படி பண்ணுங்க போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ