இல்லத்தரசிகள் மட்டுமன்றி, வீட்டு செலவுகளை பார்த்துக்கொள்ளும் குடும்ப தலைவர்களும் பணத்தை சேமிக்க பல வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். வேலைக்கு செல்லும் பெண்கள், திருமணம் ஆகாமல் தனியாக வசிப்பவர்கள், சொந்த ஊரை விட்டு வெளி ஊர்களுக்கு சென்று அங்கு தங்கி வேலை பார்ப்வர்கள் என அனைவருமே வீட்டு செலவுகள் குறித்தும் அதை கையாளும் முறைகள் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இங்கு வீட்டு செலவுகளை சமாளிக்க சில ஈசி டிப்ஸ்கள் இருக்கின்றன.
1.வீட்டிற்கான பட்ஜெட்:
உங்களுக்கு வரும் வருவாயை வைத்து மாதத்திற்கு என்னென்ன செலவுகள் இருக்கின்றன என்ற பட்ஜெட்டை நீங்கள் போட்டுக்கொள்வது மிகவும் நல்லது. வருமானத்தில் எவ்வளவு செலவாகிறது, என்னென்ன தேவையற்ற செலவுகள் இருக்கின்றன போன்ற விஷயங்களை ஆராய்ந்து பட்ஜெட் போட வேண்டும். வீண் செலவுகள் இருந்தால் அதை எந்த வகையில் சேமிக்கலாம் என்று யோசிக்க வேண்டும். இப்படி தெளிவாக மாதாமாதம் பட்ஜெட் போடுவதால் பணம் எந்த வகையில் செலவாகிறது என்பதையும் சேமிக்க என்னென்ன வழிகள் இருக்கிறது என்பதையும் நாம் கண்டு பிடிக்கலாம்.
2. உணவை திட்டமிடுங்கள்:
உணவு திட்டமிடல் உங்கள் குடும்பத்திற்கு சத்தான உணவை வழங்க உதவுவது மட்டுமல்லாமல், பல வகைகளில் சேமிக்கவும் வழிவகை செய்கிறது. என்னென்ன மளிகை பொருட்களை வாங்கலாம் என்றும் எந்த மாதிரியான உணவினை செய்தால் வீணாகாமல் பார்த்துக்கொள்ளலாம் என்றும் இந்த உணவு பட்ஜெட்டின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதனால் உணவு வீணாகமல் தவிர்க்கலாம். வீணாக உணவிற்காக செலவழிக்கும் பணத்தினை சேமிக்கலாம். வாராந்திர உணவுத் திட்டத்தை உருவாக்கி, நீங்கள் பல்பொருள் அங்காடிக்குச் செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஷாப்பிங் பட்டியலை உருவாக்கலாம். இதனால் நிறைய பணத்தை சேமித்து வைக்கலாம்.
3.இரண்டாம் தவணையில் வாங்கவும்:
நம்மில் பலருக்கு எந்த பொருட்களை வாங்கினாலும் அதை புதிதாக வாங்கும் பழக்கம் இருக்கும். எப்போதும் அனைத்து பொருட்களையும் புதிதாக வாங்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. சிக்கனமாக வாங்குவதற்கென்று பல கடைகள் இருக்கின்றன. அனைத்து பொருட்களையும் பெரிய கடைகளில் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உடனடியாக பயன்படுத்திவிட்டு தூக்கிப்போடும் பொருட்களை ரோட்டு கடைகள் வாங்கலாம். ஃபேன்ஸி கடைகளி இருப்பதை விட இது போன்ற கடைகளில் விலை மிகவும் குறைவாகவே இருக்கும்.
மேலும் படிக்க | School Holidays: நவம்பரில் இத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறையா?
4.மொத்தமாக வாங்கவும்:
காலாவதி ஆகாத பொருட்களை மொத்தமாக வாங்கலாம். அப்படி வாங்குவதனால் பல தள்ளுபடிகள் கிடைக்கும். மொத்தமாக வாங்காமல் அடிக்கடி ஷாப்பிங் செய்ய செல்வதால், தேவை இல்லாத பல பொருட்களை நாம் வாங்க கூடும். இதை தவிர்க்க பொருட்களை மொத்தமாக வாங்குவது நல்லது.
5.மின்சாரத்தை சேமித்தல்:
மின்சாரத்தினால் இயங்கும் உபகரணங்களைப் பயன்படுத்துதல், அனைத்து வீட்டினருக்கும் இன்றியமையாத ஒன்று. அப்படி மினாரத்தால் இயங்கும் பொருட்கள் பயன்பாட்டில் இல்லாதபோது அவற்றை ஆஃப் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு யாரும் இல்லாத அறையில் விளக்குகள் மற்றும் மின்விசிறியை அணைப்பது. மின்சார பில்களைக் குறைப்பது பணத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும்.
மேலும் படிக்க | நீங்கள் வைத்திருக்கும் தங்கம் எவ்வளவு தூய்மையானது? கண்டுபிடிக்க 4 வழிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ