2022-ல் இவர்களின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றுவார் சனி பகவான்: யார் வாழ்க்கை எப்படி மாறும்

புத்தாண்டில் வரும் சனிப்பெயர்ச்சி இந்த லக்ன ஜாதகக்காரர்களை எப்படி பாதிக்கப்போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 29, 2021, 06:58 PM IST
2022-ல் இவர்களின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றுவார் சனி பகவான்: யார் வாழ்க்கை எப்படி மாறும் title=

2022 Horoscope: 2022 ஆம் ஆண்டு சனி பகவான் தனது சொந்த ராசியிலேயே சஞ்சரிக்கப் போகிறார். ஜோதிடர்களின் கூற்றுப்படி, புத்தாண்டில் சனி பகவானின் ராசி பரிவர்த்தனையின் காரணமாக, சில ராசிக்காரர்களின் நல்ல பலம் பல மடங்கு அதிகரிகும். 

இதனுடன், சனி பகவான் மொத்த 4 லக்ன ஜாதகக்காரர்கள் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறார். புத்தாண்டில் (New Year) வரும் சனிப்பெயர்ச்சி இந்த லக்ன ஜாதகக்காரர்களை எப்படி பாதிக்கப்போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

ரிஷபம் லக்னம்:

ரிஷபம் லக்ன ஜாதகக்காரர்களுக்கு 2022 மிகவும் சாதகமாக இருக்கும். மகர ராசியில் சனிபகவான் பிரவேசம் செய்வது நல்ல பலன்களைத் தரும். புத்தாண்டில் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். மேலும் தந்தையின் ஆதரவும் கிடைக்கும். பலம், கௌரவம், புகழ் ஆகியவை அதிகரிக்கும். அரசியலில் ஈடுபடுபவர்கள் ஆதாயம் அடைவார்கள். பழைய நோய்களில் இருந்து விடுபடுவீர்கள்.

ALSO READ | சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ‘4’ ராசிகளுக்கு இந்த புத்தாண்டு ஜாக்பாட் தான்..!! 

மிதுன லக்னம்:

மிதுன லக்ன ஜாதகக்காரகளுக்கு சனிபகவான் கலவையான பலன்களைத் தரப்போகிறார். குடும்பத்தில் அழுத்தமான சூழல் இருக்கும். மேலும் குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் பிரச்சனைகள் ஏற்படும். கடின உழைப்புக்கு சாதகமான பலன் கிடைக்காது. கால், வயிறு சம்பந்தமான நோய்கள் தொல்லை தரும். குழந்தையின் உடல் நலனில் அக்கறை தேவை.

கடக லக்னம்:

2022-ல் ஏழாவது மற்றும் எட்டாவது வீட்டிற்கானவராக சனிபகவான் (Lord Shani) இடம் பெயர்வார். இதனால் வியாபாரத்தில் லாபம் ஏற்படும். மேலும், புதிய தொழில் தொடங்குவது நன்மை தரும். இருப்பினும், மனநல பிரச்சினைகளால் சிக்கல்கள் வரலாம். 

புத்தாண்டு பண லாபத்திற்கு சாதகமாக இருக்கும். சனிப்பெயர்ச்சியால் தந்தைக்கு சிரமம் ஏற்படலாம். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இது தவிர தாயாரின் உடல்நிலையில் அக்கறை தேவை. வீடு, வாகனச் செலவுகள் அதிகரிக்கும். புத்தாண்டில் வாகனம், நிலம் வாங்க நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். 

(பொறுப்புதுறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | 2022 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் : பதவி உயர்வு, அங்கீகாரம் கிடைக்கும் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News